எந்த நோய்க்கு எந்த மூலிகை பலன் தரும்?- அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !!

உடலில் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகளை குணமாக்கும் மூலிகைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அவற்றப் பற்றியும் அவற்றின் சிறப்பம்சங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

சிறு சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைத்தான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு மூலிகையும் ஒரு அற்புத அரு மருந்தாகும்.

நம் கண் முன்னே பல மூலிகைகள் கிடந்தாலும் அதன் பயன் மற்றும் நன்மைகளை நாம் தெரிந்து வைத்திருப்பதில்லை.

Different types of herbs that using to treat for health issues.

அவற்றின் பலன்களை நாம் தெரிந்து வைப்பதனால் பின்னாளில் ஒரு அவசரத்திற்கேனும் அவை உதவக் கூடும். அவ்வாறு உங்களுக்கு உதவும் வகையில் இங்கே மிகச் சாதாரணமாக நம் கண் முன் விளையும் மூலிகைச் செடிகளும் அவ்ற்றின் நன்மைகளையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

திரிபலா பொடி :

வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தகரிக்கும். சரும நோய்களை குணமாக்கும். பாத வெடிப்பை மறையச் செய்யும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

செம்பருத்திபூ பொடி :

அனைத்து வகையான இதய நோய்க்கும் சிறந்தது. செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிடுவதை போல. ஏனென்றால் செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து.

குப்பைமேனி :-

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. மலச்சிக்கலை குணமாக்கும். குடல் புழுக்களை அழிக்கும். மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும்.

பாகற்காய் :

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கல்லீரலை பாதுகாக்கும். தினந்தோறும் பாகற்காய் சாறு அருந்தினால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

மணத்தக்காளி :

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். கபம் கரையும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி :

சர்க்கரை,குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். அஜீரணம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி :

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி ஆகிய பற்கள் மற்றும் ஈற்கள் சம்பந்தமான நோய்களை விரடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Different types of herbs that using to treat for health issues.

Different types of herbs that using to treat for health issues.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter