மருதாணியை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டல் என்ன நன்மைகள் உண்டாகும் என தெரியுமா?

மருதாணியை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் இங்கே தரப்பட்டுள்ளது.

Written By:
Subscribe to Boldsky

மருதாணி அழகிற்காக இருந்தாலும் இதில் பலவித மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. மருதாணியை மாதம் ஒருமுறை கைகளில் பூசிக் கொண்டால் உடலில் வெப்பம் அதிகமாகாமல் காக்கும் என்பதோடு பலவித நன்மைகளை நமக்கு தருகின்றன. சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி பிடி‌த்து விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது யூகலிப்டஸ் சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

Consumption of henna leaves may help to cure white discharge for women

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர். இது உடலுக்கு பாதகங்கள்தான் தருகிறது.

மருதாணியை கைகளுக்கு மட்டுமல்லாது பலவித வழிகளில் உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேமல் :

தேமல் :

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது. மருதா‌ணி இலையுட‌ன் சி‌றிது கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.

வெள்ளைபடுதல் :

வெள்ளைபடுதல் :

சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்து நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் விரை‌வி‌ல் குண‌ம் கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

கால் ஆணி :

கால் ஆணி :

உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம்.

பித்தத்திற்கு :

பித்தத்திற்கு :

மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம். கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.

வாய்ப்புண் :

வாய்ப்புண் :

ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

படை :

படை :

படை கால் இடுக்கு, இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையை அரைத்து தடவி வந்தால் படை குணமாகும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Consumption of henna leaves may help to cure white discharge for women

Consumption of henna leaves may help to cure white discharge for women
Please Wait while comments are loading...
Subscribe Newsletter