For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஞ்சி டீ அதிகமாய் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லதல்ல, ஏன்?

|

இன்றைய காலக்கட்டங்களில் இஞ்சி டீ குடிப்பது ட்ரெண்டாகி விட்டது. இஞ்சி சேர்க்காமல் தேநீர் தயாரிப்பது பெரும்பாலான வீடுகளில் குறைவு. இஞ்சி உடலுக்கு நல்லதுதான்.ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதுவும் தீமையை தரும்.

Side effects of ginger tea

இஞ்சியின் குணங்கள் என்ன?

இஞ்சி வயிற்றிலுள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும். வயிறு மற்றும் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.

வலி நிவாரணியாக செயல்படுகிறது. புற்று நோய் உள்ளவர்களுக்கு கீமோ தெரபி தரும் போது, இஞ்சி டீ மிகவும் பலம் தந்து, வலியை குறைக்கச் செய்கிறது. அந்த சிகிச்சையின்போது வரும் குமட்டலை நிறுத்துகிறது.

முக்கியமாக ஜலதோஷம் இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. வாந்தி, குமட்டலுக்கும் மருந்தாக இஞ்சி பயன்படுகிறது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற பொருள் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

பக்கவிளைவுகள் :

இஞ்சி உடலுக்கு நல்லதுதான். அதே சமயம் தினமும் அளவுக்கு அதிகமாக அதனை சேர்த்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளையும் தரும் என்பது தெரியுமா?

ஒரு நாளைக்கு இஞ்சி 4 கி அளவிற்கும் அதிகமாய் சாப்பிடக் கூடாது. இது பைல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்துவிடும்.

அதிகமாய் இஞ்சியை சாப்பிடும்போது, அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துவிடும். நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவைகளை எற்படுத்திவிடும்.

உங்கள் உடல் சென்சிடிவானது என்றால், இஞ்சியும் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியதுதான். அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும். குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடிப்பது உகந்தது அல்ல.

இஞ்சியில் சாலிசிலேட் என்ற பொருள் உள்ளது. அவை ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கச் செய்யும். ரத்தப் போக்கு சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்கள் இஞ்சி டீயினை தவிர்க்கவேண்டும்.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது :

வயிற்றில் அல்சர் உள்ளவரகள், சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்கள், ஆகியோர் இஞ்சி டீயை எடுத்துக் கொண்டால், அவற்றின் நிலைமை மேலும் பாதிப்பிற்குள்ளாகும்.

கர்ப்பிணிகளும் இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை கர்ப்பப்பையை இறுகச் செய்யும். அதேபோல் மிக பலமீனமான கர்ப்பிணிகளும் இஞ்சியை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உதிரப்போக்கிற்கு காரணமாகிவிடும். அறுவை சிகிச்சை ஆனவர்களும் இஞ்சி டீயை எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

நீங்கள் ஏதேனும் வியாதிக்கு மருந்துகளை எடுத்துக் கொள்வரகளேயானால், இஞ்சி டீயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை மருந்துக்களுடன் வினைபுரிந்து பின்விளைவுகளை தரலாம்.

English summary

Side effects of ginger tea

Side effects of ginger tea
Story first published: Thursday, June 16, 2016, 14:09 [IST]
Desktop Bottom Promotion