உடலில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு டேஸ்டி மில்க்

By: Hemalatha V
Subscribe to Boldsky

பொருளாதார உழைப்பிற்கு உடல் தான் முதல் முதலீடு. அது ஆரோக்கியமாக இருந்தால்தான் நீங்கல் தெம்பாக செயல்பட முடியும். ஒரு தலைவலி வந்தால்கூட அன்று நாள் முழுவதும் போராட்டமாகத்தான் இருக்கும். நமது உடல் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனையை இன்னும் ஒருபடி மேல போய், பிரச்சனையே உடலாக இருந்தால், பாதி நேரம் இந்த பாதிப்புகளை சரி பண்ணுவதிலேயே முடிந்துவிடும். பின் எப்படி வேலையில் கவனம் செலுத்துவது.

ஆகவே உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமாய் நீங்கள் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் எவை தெரியுமா? மூளை, இதயம், கல்லீரல், மற்றும் சிறுநீரகம்.

இவை ஆரோக்கியமாக இருந்தால் உங்களால் நீண்ட ஆயுளோடு வாழ முடியும். மூளைக்கு நல்ல தூக்கத்தையும், இதயத்திற்கு கொழுப்பு குறைவான உணவையும், கல்லீரலுக்கு ஆரோக்கியமான உணவுகளையும், சிறு நீரகத்திற்கு நிறைய நீரையும் நாம் கொடுத்தால் அவற்றின் ஆரோக்கியம் எப்போதும் பலப்படும். இப்படி நான்கு உறுப்புகளுக்கும் பலம் தரும் ஒரு ஆரோக்கிய பானம் எது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஹெர்பல் பால் :

ஹெர்பல் பால் மிகவும் சத்து நிறைந்த , சுவை நிறைந்த ஒரு பால். இதில் நாம் அன்றாடம் குடிக்கும் பால் இருக்காது. தேங்காய்ப் பால், மஞ்சள், பட்டை , தேன் கலந்த இந்த பாலை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் அகற்றிவிடும்.

ஹெர்பல் பாலின் பலன்கள் :

நச்சுக்களை அகற்றும். இரைப்பை வியாதிகளை குணப்படுத்தும். சரும வியாதிகளை சரிபடுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். நுரையீரலை பலப்படுத்தும்.

ஹெர்பல் பாலின் பலன்கள் :

தூக்கமின்மை வியாதியை குணபடுத்தும், தசைகளுக்கு வலிமை தரும். ஜீரண மண்டலத்தை வலிமையாக்கும். ஆர்த்ரைடிஸை குணமாக்கும். உணவு அலர்ஜியை தடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கும்.

ஹெர்பல் பால் தயாரிக்கும் முறை :

தேவையானவை :

தேங்காய் பால் - 2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
இஞ்சி -பொடியாய் நறுக்கியது அரை ஸ்பூன்
பட்டைபொடி- அரை டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
மிளகுபொடி - ஒரு சிட்டிகை.

 

ஹெர்பல் பால் தயாரிக்கும் முறை :

ஒரு பாத்திரத்தில் தேனை தவிர்த்து , தேவையான மற்ற அனைத்தையும் கலந்து கொதிக்கவிடவும். இது தங்க நிறமாக மாறும். கொதி வந்ததும் அதனை இறக்கி வெதுவெதுப்பான நிலையில் தேன் கலந்து குடிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Delicious Milk to Detox Liver

Consumption of this Delicious Milk may give number of health benefits
Please Wait while comments are loading...
Subscribe Newsletter