For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

By Mayura Akilan
|

Diabetes
வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

நாவல்பழக் கொட்டை

நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி

மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர்

இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தையக் கீரை

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1 டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

அவரைக்காய் பொரியல்

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதம் பருப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

Natural Remedies for the Treatment of Diabetes | டைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

Healthy herbs in the kitchen work along with a healthy lifestyle to help prevent and manage diabetes. Baked goods are more diabetic friendly with spices like cinnamon used to lessen the need for sugar.
Story first published: Tuesday, December 25, 2012, 18:03 [IST]
Desktop Bottom Promotion