For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு

By Mayura Akilan
|

Mustard
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

சத்தான கடுகு

கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

மைக்ரேன் தலைவலி

கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

உணவு உண்பதற்கு முன்பு கருப்பு கடுகினை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஜீரணசக்தி கிடைக்கும். அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

சைனஸ் கோளறு நீங்கும்

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

விஷ முறிவு மருந்து

சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

சிறுநீர் கோளாறுகள்

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்

கருப்பை கட்டி

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும். வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி, காலையில் வெந்நீரில் குளித்துவர, வலி நீங்கும். கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. நல்ல உறக்கத்தை தருகிறது.

கடுகில் உள்ள சத்துக்களை தெரிந்து கொண்ட பின்னர் இனி தாளிக்கும் போது நிஜமாகவே சந்தோசப்படுவீர்கள்தானே!

English summary

Benefits of mustard seeds | கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு

Mustard seeds have been around since almost 5,000 years. They're known to have numerous benefits since they're low in calories and high in nutritional value and have a lot of antibacterial and antiseptic qualities.They're available in different varieties — black mustard, white mustard and brown Indian mustard, in whole as well as in powdered form.
Story first published: Thursday, April 26, 2012, 10:22 [IST]
Desktop Bottom Promotion