இதயக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா? அப்ப தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க....

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிங்க...

Subscribe to Boldsky

தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர். இதய நோய் வருவதற்கு கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் அதிகமாக சாப்பிடுவதுடன், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான். இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் உட்கொண்டு வர வேண்டும்.

What Happens When Your Arteries Are Blocked And How Pomegranate Can Unblock Them

அதில் மாதுளை ஏராளமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டது. இந்த மாதுளை உயிர் போகும் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றும் அளவிலான சத்துக்களைக் கொண்டுள்ளது. மாதுளையில் உள்ள ஆன்டி-அதிரோஜெனிக் பண்புகள் இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் நல்ல பாதுகாப்பை வழங்கி, இதய செயல்பாட்டை மேம்படுத்தும்.

இப்போது மாதுளை எப்படி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், இந்த மாதுளையில் அப்படி என்ன உள்ளது என தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் #1

நாள்பட்ட அழற்சி இதய குழாயில் இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுக்கும். மாதுளையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வர இதய நோயில் இருந்து விடுபடலாம்.

காரணம் #2

இதய நோய்கள் வருவதற்கு மற்றொரு காரணம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இரத்த குழாய்களில் இருப்பது. இது அப்படியே நீடிக்கும் போது, இதய குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதய நோய்க்கு வழிவகுக்கும். மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளது.

காரணம் #3

மாதுளையை அன்றாடம் சிறிது உணவில் சேர்த்து வர, இதயம் விரிவடைவது குறையும்.

காரணம் #4

மாதுளையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் தளர்த்திவிடும்.

காரணம் #5

மாதுளை இதய தசைகளில் கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்க உதவும். இதனால் இதய நோயால் அவஸ்தைப்படுவது தடுக்கப்படும்.

காரணம் #6

மாதுளை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருந்தால், இதயத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

காரணம் #7

மாதுளையை உட்கொண்டு வந்தால், அது ஈசிஜியில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

What Happens When Your Arteries Are Blocked And How Pomegranate Can Unblock Them

What happens when your arteries are blocked and how pomegranate can unblock them. Read on to know more...
Story first published: Wednesday, November 16, 2016, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter