For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் இதயம் பத்திரமாக இருக்க இதெல்லாம் செய்கிறீர்களா?

|

இதயம் எத்தனை மிக முக்கிய உறுப்பு என்பதை சுட்டிக் காட்டத்தான் இயற்கை அதனை நாள்புறமும் பத்திரப்படுத்த மார்பெலும்பு வைத்து கவசமாய் பாதுகாக்கிறது. அதனால் கீழே விழுந்தாலும் இதயம் பாதிக்கப்படுவதில்லை. அத்தனை மென்மையானது இதயம்.

உடல் முழுவதும் தேவையான ரத்தத்தை அளிப்பது இதயம்தான். அதுபோலவே சுத்தமான ஆக்சிஜனை உடல் முழுவதும் திசுவளர்ச்சிக்காக அளிக்கிறது. அதனாலேயே மற்ற உறுப்புகளில் உண்டாகும் பாதிப்புகளை விட இதயத்தில் உண்டாகும் சிறு பாதிப்பும் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது.

அப்படி இதயத்தை பாதுக்காக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடைப் பயிற்சி :

நடைப் பயிற்சி :

நடைப்பயிற்சி அதிக ரத்த ஓட்டத்தை இதயத்திற்கு தருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 1 கி.மி. நடப்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் மாடிப்படி ஏறுவது இதயத்தை பலப்படுத்தும். எனவே தினமும் எடுத்ததெற்கெல்லாம் வண்டியை உபயோக்ப்படுத்தாமல், நடந்து செல்வதை பழக்குங்கள்.

சாப்பிடவேண்டியவை :

சாப்பிடவேண்டியவை :

இந்த காய்கறிகளை அன்றாட வாழ்க்கையில் சாப்பிட்டு வந்தால் இதயத்தை வலுப்படுத்தலாம்.

கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன.

காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன.

அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன.

சாப்பிடவேண்டியவை :

சாப்பிடவேண்டியவை :

வெங்காயம், பூண்டு ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதய வால்வுகளில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும். . கீரைகள் இதயத்தை வலுவாக்கும். இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு.

பழங்கள் :

பழங்கள் :

தினமும் ஏதாவது ஒரு பழமாவது சாப்பிடும் பழக்கத்தை வைத்திடுங்கள். பழங்களில் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை. இதயத்துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது.

விட்டமின் சத்துக்கள் :

விட்டமின் சத்துக்கள் :

விட்டமின்கள் இதயத்திற்கு அவசியமான சத்துக்கள். பி6 ,பி12 மற்றும் விட்டமின் ஈ சத்துக்கள் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்

புகை, மது :

புகை, மது :

இவை இரண்டும் இதயத்திற்கு ஆபத்தானவை. கெட்ட ரத்தத்தை அதிகமாக்கி, இதயத்தின் வேலையை ரெண்டு மடங்காக்கிவிடும். அதுபோலவே கெட்ட கொழுப்பை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்து, ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்துவிடும். இதனால் இதய நோய்கள் உண்டாகிவிடும். ஆகவே இவை இரண்டும் தொடக் கூடாது.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

அதிகப்படியான வேலைப் பளு கவலைகள் இதயத்தை பாதிக்கக் கூடியவை. அவை ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அதிகம் சுரக்கின்றன. இவை இதயத்திற்கு எதிராக செயல்படுவவை. ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி, இதயத்தில் அடைப்பை உண்டாக்கிவிடும். அதனை தவிர்க்க யோகா, தியானம் , இசை கேட்பது ஆகியவை மன அமைதியையும், இதயத்திற்கு பாதுகப்பையும் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Things to Do to protect your heart

Things to Do to protect your heart
Desktop Bottom Promotion