For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா? எச்சரிக்கை..ஒரு உஷார் ரிப்போர்ட்.

|

நாம் யாருமே உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை. இது குழந்தைகளை எவ்வளவு பாதிக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?

அவர்கள் விரும்பும் உணவுகளை, அவர்களின் மகிழ்ச்சிக்காக வாங்கிக் கொடுக்கிறோம். அவர்கள் குண்டாக இருந்தால்தான் அழகு என கொஞ்சுகிறோம். ஆனால் நாம் அவர்களின் ஆபத்தான நோய்களுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்று அறிவீர்களா?

Obesity develops higher risk of heart diseases for children

அமெரிக்காவில் ஜிய்சிங்கர் ஹெல்த் ஸிஸ்டம் என்ற உடல் நல சேவை மையம் உலக அளவில் ஒரு புதிய ஆராய்ச்சியை கடந்த எட்டு வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது. ஜிங்க் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளப்பட்டது.

இதில் உடல் பருமனால் மிக சிறிய வயதிலேயே நிரந்தரமாக இதய நோய்கள் அவர்களை தாக்குகின்றன என கூறியுள்ளார்கள். அவ்வாறு உடல் பருமனுள்ள குழந்தைகளின் விகிதமும் அதிகரித்து வருகின்றன என கூறுகின்றனர்.

ஆராய்ச்சி :

சுமார் 8 வய்திலிருந்து 16 வயது வரை உள்ள வயதினரில், உடல் பருமனான குழந்தைகள் 20 பேர் மற்றும் நார்மல் எடையுள்ள குழந்தைகள் 20 பேர் என ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆராய்ச்சியில் உடல் பருமன் உள்ள குழந்தைகளின் இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிள் 20 சதவீதம் அதிகமான தசை வளர்ச்சியும், இதய அறையின் சுவர்கள் 12 சதவீதம் அதிகமாக தடித்தும் காணப்படுகிறது என்ற குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.

ஸ்கேன் ரிப்போர்ட்டின்படி, இந்த தடித்த இதயச் சுவர்களால், இதயத்திற்கு ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலை உருவாகிறது. இது உயிருக்கு ஆபத்தான இதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதய செயலிழப்பு :

கலிஃபோர்னியாவில் , க்ரெக் ஃபொனாரோ என்ற இதய வல்லுநர், இந்த ஆராய்ச்சியில் ஈடுபடவில்லையென்றாலும், இந்த ஆய்வின் முடிவினைக் கொண்டு தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

இதய தடிப்பின் காரணமாக, இதயம் செயலிழப்பு, முறையற்ற இதயத் துடிப்பு, இளம் வயதிலேயே மரணம் என காரணமாகும். என்ற அதிர்ச்சியான விஷயத்தை கூறியுள்ளார்.

எது எப்படியோ குழந்தைகளின் உடல் பருமனுக்கு பெரியவர்கள்தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். அவர்களு சிறு வயதில் எது ஆரோக்கியமானதோ, அதனை கொடுப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான அக்கறை. மனதிற்கு பிடித்ததை கொடுப்பதை விட, உடலுக்கு எது பிடிக்கும் என தெரிந்து உனவுகளை கொடுங்கள். அவர்களின் வாழ்க்கையை நல்ல முறையில் தொடங்கட்டும்.

English summary

Obesity develops higher risk of heart diseases for children

Obesity develops higher risk of heart diseases for children
Story first published: Sunday, May 29, 2016, 7:45 [IST]
Desktop Bottom Promotion