For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய நலனை சீர்குலைக்கும் மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய் - ஆய்வில் தகவல்!

By Hemi Krish
|

ஃபேட்டி லிவர் என்பது மது பழக்கத்தினாலும் மற்றும் குடிக்காமல் இருந்தாலும் கூட வேறு காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து கல்லீரலை பாதிக்கும். மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோயும் (NAFLD) இதய பாதிப்புகளை உண்டாக்குகிறது என சமீபத்திய ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

Cardio Vascular Diseases

பாரிஸில் ஆய்வு:

பாரிஸில் உள்ள பிட்டி ஸல்பெட்ரியர் (Pitie-Salpetriere) மருத்துவமனையும் மற்றும் பியர் மேரி-க்யூரி (Pierre and Marie Curie University) பல்கலைக்கழகமும் சேர்ந்து சுமார் 6000 இதய நோயாளிகளிடம் ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்தது யாதெனில் மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் (NAFLD) என்னும் நோயால் இதய நோய்களும், இதயத்தில் அடைப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதயத்தில் அடைப்பு:

கரோடிட் தமனிகள் நமது கழுத்தில் அமைந்துள்ள பெரிய ரத்த நாளமாகும். அது கழுத்து, முகம் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை கொண்டு செல்கிறது. அந்த தமனியில், அத்ரோஸ்கெலெரோஸிஸ் (atherosclerosis) எனப்படும் அடைப்பை ஏற்படுத்துகிறது. இது மிகவும் ஆபத்தான நோயாகும். அதனால் ஃபேட்டி லிவர் உள்ளவர்களை இதய நோயின் ஆபத்திலிருந்து காப்பாற்ற அவர்களை கண்காணிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதயம் மற்றும் கல்லீரல் இரண்டுமே நமது உடலின் மிக முக்கியமான உறுப்புக்களாகும். இவ்விரண்டில் எது பாதிப்படைந்தாலும் உயிருக்கே உலைவைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

இதைப் பற்றியான ஆய்வறிக்கை விரிவாக Journal of Hepatology எனும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Non-Alcoholic Fatty Liver Leads To Cardio Vascular Diseases!

Non-alcoholic fatty liver leads to cardio vascular diseases,
Desktop Bottom Promotion