For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதயத்தை பலப்படுத்த செய்யுங்கள் கரௌஞ்சாசனா !!

|

இதயம்தான் இன்றியமையாதது என சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நாம் யார் என அதன் துடிப்பே நம்மை உணர வைக்கிறது.

சுத்தமான ரத்தத்தை மூளைக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும் மிக முக்கிய வேலையை செய்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் மோசமான உணவுகள் மற்றும் புகை , மது போன்ற வேண்டாத தீய பழக்கங்களாலும் இதயம் பாதிக்கின்றன. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு 40 களிலேயே வருகின்றன.

 Krounchasana to stimulate Heart Function

இப்போது குழந்தைகளையும் இதய நோய்கள் தாக்கும் அபாயத்தில் இருக்கிறோம். காரணம் கடைகளில் வாங்கும் கொழுப்பு நிறைந்த மசாலா உணவுகள்,. சரியான உடற்பயிற்சி இல்லாதது என சிறு வயதிலேயே உடல் பருமன் வந்து இதனால் பல ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன.

நோய்கள் என்பவை வராதவரை எதுவும் தெரியாது. வந்தால்தான் அதன் பாதிப்பை உணர்கிறோம். வருமுன் காப்போம் என்று யாரும் உணர்வதில்லை. இதனால்தான் இன்று எல்லாரும் மருத்துவமனைகளின் முன் நிற்கிறோம்.

எளிமையான சத்தான உணவு, போதிய உடல் உழைப்பு, குழந்தைகள் ஓடியாடி விளையாடுதல் என எந்த ஒரு ஆரோக்கியமான சூழ் நிலையிலையிலும் சமுதாயம் நன்றாக இருக்கும். அங்கே நல்ல எண்ணங்கள் மட்டுமே வளரும்.

இதயத்தை பலப்படுத்துவது மிக முக்கியம் காய்கறிகள் பழங்கள் பின்னர் யோகா இவை எல்லாம் இதயத்திற்கு நல்ல நண்பர்கள். யோவாவிலுள்ள க்ரௌன்சாசனா இதயத்தை பலப்படுத்துகிறது. அங்கே தங்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

க்ரௌஞ்சா என்றால் சமஸ்கிருதத்தில் நாரை. நாரை போன்ற வடிவத்தில் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றது. எப்படி செய்யலாம் என காண்போம்.

கிரௌஞ்சாசனா :

முதலில் கால் நீட்டி அமருங்கள். பின்னர் வலது காலை மடக்கி அமர வேண்டும்.

அதன்பின் மெதுவாக இடது காலை மேலே நீட்டுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்டி உடலிற்கு அருகில் கொண்டு வாருங்கள். இரு கைகளாலும் இடது பாதத்தை பிடித்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இடது காலை மேல் நோக்கி நீட்டுவதில் சிரமமிருந்தாலும் நாளடைவில் பழகிவிடும். இதே நிலையில் ஆழ்ந்து இழுத்து மூச்சை விட்டபடி 15 நொடிகள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரலாம்.

பலன்கள் :

இதயத்திற்கு வலு தரும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். முட்டியிலுள்ள தசைகளை பலப்படுத்தும். கால்களுக்கு நல்ல பலத்தை தரும். தோள்பட்டைக்கு நெகிழ்வுத்தன்மையை தரும்.

குறிப்பு : பாதம் மற்றும் மூட்டுகளில் அடிபட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

English summary

Krounchasana to stimulate Heart Function

Krounchasana to stimulate Heart Function
Story first published: Wednesday, August 17, 2016, 14:51 [IST]
Desktop Bottom Promotion