For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

|

தேங்காய் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும், எனவே இதய மற்றும் உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு சாரரும். நல்ல கொழுப்பைத்தான் அதிகரிக்கச் செய்யும் ஆகவே சாப்பிடலாம் என்று ஒரு சாரரும் குழம்பிக் கொண்டிருப்பது நடைமுறையில் இருப்பதுதான். அறிவியல் பூரவமாகவே விஞ்ஞானிகள் இன்னும் தேங்காயை ஆய்விற்கு உட்புகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேங்காயின் குண நலன்கள் :

தேங்காயின் குண நலன்கள் :

இந்த குழப்பமான நிலையில், தேங்காய் பால் மற்றும் தேங்காயை தாராளமாக உபயோகப்படுத்தலாம் ஆனால் தேங்காய் எண்ணெயில் நிறைவுறும் கொழுப்பு இருப்பதால் அதனை குறைவாக உபயோகப்படுத்தலாம் என அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் கூறுகின்றது. இந்த குழப்பங்களை தவிர்க்க முதலில் அவற்றின் குண நலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் தேங்காய் தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் என தென்னையின் பாகங்களை பிரித்து அவற்றின் நன்மை தீமைகளை பட்டியிடலாம்.

தேங்காய் :

தேங்காய் :

கார்போஹைட்ரேட், மினரல், புரோட்டின் வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாக்கும் வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

தேங்காய் பால் :

தேங்காய் பால் :

தேங்காய் பாலில் அதிக புரதம் உள்ளது. இது அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும். நாம் தேங்காய் பாலை காய்கறிகளுடன் சமைப்பதால் தரமான சத்துக்களும் , நார்சத்தும் கிடைக்கப் பெறுவதால் அதிலுள்ள நிறைவுறும் கொழுப்பு சமன் படுத்தப்படுகின்றன. இதனால் தேங்காய் பாலில் சமைக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும். அதோடு இவை HDL எனப்படும் நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் கொலஸ்ட்ரால் குறையும்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் மைரிஸ்டிக் அமிலம் ஆகியவை உள்ளது. இரண்டுமே நிறைவுறும் கொழுப்பு. பொதுவாக உடலுக்கு நிறைவுறும் கொழுப்பு தீமை தரக் கூடியது. நிறைவுறா கொழுப்பு நல்லது.

இங்கேதான் ஒரு முக்கிய விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நிறைவுறும் கொழுப்பும் நமக்கு தீமை செய்வதில்லை. மிகவும் கேடான பாமிடிக் அமிலம் ஒரு நிறைவுறும் கொழுப்பு. இது தேங்காய் எண்ணெயில் குறைவு.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

ஆனால் இந்த பாமிடிக் அமிலம் சாக்லேட், பிஸ்கட் மற்றும் மாட்டிறைச்சியில் உள்ளது. நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் எவை தீமையென.

ஆக தேங்காய் எண்ணெயில் நிறைவுறும் கொழுப்பு இருந்தாலும் மிகக் குறைவாகவே உள்ளது.அதும் லாரிக் அமிலம் மிகவும் நிறைந்தவை. இவை உடலுக்கு பாதகம் தராது. மிகக் குறைந்த அளவு உபயோகப்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் நன்மைகள் :

தேங்காய் எண்ணெய் நன்மைகள் :

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது. சரும வியாதிகளிலும் தயாரிக்கப்படும் எண்ணெய்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது. அதோடு கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.

இள நீர் :

இள நீர் :

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பின் வழியாக செலுத்தலாம்.

இள நீர் :

இள நீர் :

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Coconut Good or Bad for Health

Is Coconut Good or Bad for Health
Desktop Bottom Promotion