உங்கள் இதயம் எவ்வளவு பாதுகப்பாக உள்ளது? நீங்கள் முக்கியமாய் கடைபிடிக்க வேண்டிய வழிகள்

By: Hemalatha V
Subscribe to Boldsky

இதயம் என்பது உடலில் உயிர் நாடி அமைந்த இடம். அதனை மார்புக் கூடும், மற்ற உறுப்புகளும் சுற்றிலும் பாதுகாத்து வைப்பதிலேயே நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இதன் முக்கியத்துவத்தை. ஆனால் நாம் அவற்றை எல்லாம் லட்சியமே செய்யாமல், பிடித்தபடி உண்டு, பிடித்தபடி செய்து, இதயத்தில் நலனைக் கெடுக்கிறோம். இதனால் நம் வாழ் நாளும்தானே சேர்ந்து குறைகிறது.

இதயத்தை பாதிக்கும் காரணங்கள் :

மிக முக்கியமான காரணம் மன அழுத்தம், பின் கொழுப்பு உணவுகள், கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகள், புகை மது இவையெல்லாம் சேர்ந்து இதயத்தை இம்சிக்கின்றன.

Foods that protect your heart


இதய பாதிப்பினை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் :

அடிக்கடி படபடப்பு, மூச்சிரைப்பு வேகமாக இருத்தல், மூச்சுத் திணறல், இடது கை முழுவதும் வலி, தலைசுற்றல், பின் முதுகு வலி ஆகியவை இதயபாதிப்பின் அறிகுறிகள்.

Foods that protect your heart


இதய நோய்களுக்கான காரணங்கள் :

அதிக கெட்ட கொலஸ்ட்ரால், மரபு ரீதியாக இதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், தேவையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, புகைப்பழக்கம், உடல் பருமன், இவை எல்லாம் இதய பாதிப்பிற்கு வழி வகுப்பவை.

இதயத்தை பாதுகாக்கும் உணவுகளை தெரிந்து கொள்வோமா?

பழங்கள் மற்றும் காய்கறிகள் :

பழங்களும் , காய்கறிகளும் உங்கள் இதயத்திற்கு உற்ற நல்ல நண்பர்கள். இவற்றிலுள்ள நார்சத்துக்களும் தேவையான விட்டமின்களும் இதயத்தை கவசம் போல் காக்கின்றன. நல்ல நிறங்கள் கொண்ட கலர் கலரான பழங்களும் காய்களும் இதயத்திற்கு இன்னும் நெருக்கமான நண்பர்கள். தினமும் இவைகள் உங்கள் டயட்டில் இருக்க வேண்டியதன் கட்டாயத்தை உணருங்கள்.

Foods that protect your heart

முழு தானியங்கள் :

முழுதானியங்களில் புரோட்டின் , நார்சத்து மற்றும் தேவையான நுண்சத்துக்களும் உள்ளன. இவை இதயத்திற்கு பலம் அளிக்கும். கோதுமை, ராகி, கம்பு, ஓட்ஸ் போன்ற தானிய வகைகளை கட்டாயம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Foods that protect your heart

நல்ல கொழுப்பு உணவுகள்:

நிறைவுறா கொழுப்பு அமிலங்களான நல்ல கொழுப்பு உணவுகள் இதயத்திற்கு மிக மிக நல்லது. அவை ஒமேகா 3 என அறியப்படும் உணவுவகைகளை சொல்லலாம். இவை பொதுவாக தாவரம் மற்றும் கடலிலிருந்து பெறப்படுகிறது.

செக்கிலிருந்து பெறப்படும் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், நட்ஸ், மீன், ஆகியவை இதயத்திற்கு தெம்பு தருபவை. அவைகள் இதயத்தில் அடைக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சீராக இதயத்திற்கு அனுப்பப்படும்.

Foods that protect your heart
நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் எனப்படுபவை கெட்ட கொழுப்புகள். இவைதான் இதயத்திற்கு கெடு தரும். அவற்றை மிகக் குறைவான அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவை இறைச்சி, வெண்ணெய், எண்ணெயில் பொறித்த உணவுவகைகள் ஆகியவற்றை சொல்லலாம்.

Foods that protect your heart


உங்கள் எடையை சரிபார்க்கவும் :

உங்கள் எடையை மாதம் ஒரு முறையாவது சரிபார்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் எடைக்கும் உயரத்திற்கும் ஒத்துப் போனால், உங்கள் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Foods that protect your heart

சுறுசுறுப்பாக இருங்கள் :

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு வீட்டில் போதுமான வேலை இல்லையென்றால் தினமும் வாக்கிங், செல்வது மிக அவசியம். உடற்பயிற்சி, யோகா இவை எப்போதும் உங்கள் இதயத்தை பலமிக்க வீரனாக செயல்பட வைக்கும். தேவையில்லாத கொழுப்புகளை விரட்டியடிக்கும்.

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Foods that protect your heart

Foods that protect your heart
Please Wait while comments are loading...
Subscribe Newsletter