For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல கொழுப்பும்( HDL) உடலுக்கு ஆபத்தை தருமா?- அதிர்ச்சி தகவல்

|

அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்துதான் என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ, உடலிலுள்ள நல்ல கொழுப்பு எனப்படும் HDL க்கு பொருந்தும். இந்த்தனை காலமும் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு அமிலங்கள் மிகவும் கெடுதல் தரும்.

நல்ல கொழுப்பு அமிலங்களான HDL உடலுக்கு நல்லது தரும் என படித்திருப்பீர்கள். அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மைதான் என்றாலும் அதிகமான HDL உயிருக்கு ஆபத்தை தரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Excess Good cholesterol may shorten your life

பொதுவாக உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளும் கொலஸ்ட்ராலும் இதயத்தின் வால்வுகளில் படியும்.இது இதய அடைப்புக்கும், இதய நோய்களுக்கும் காரணமாகும்.

ஆனால் இந்த நல்ல கொழுப்பானது (HDL) கெட்ட கொழுப்புகளை இதயத்திலிருந்தும், ரத்த குழாய்களிலிருந்தும் வெளியேற்றி கல்லீரலுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. இதனால் இதயம் கொழுப்பிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதய நோய், இதய அடைப்பு வராமல் காக்கிறது. இப்படி முந்தைய ஆய்வில் சொல்லி வந்தார்கள்.

ஆனால் இப்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில், அதிகப்படியான நல்ல கொழுப்பு அமிலங்களும் இறப்பிற்கு காரணமாகிறது என தெரிய வந்துள்ளது.

அதிகப்படியான நல்ல கொலஸ்ட்ரால் சிறு நீரக செயலிழப்பிற்கு காரணமாகிறது என்று கூறுகிறார் மிசௌரியிலுள்ள வாஷிங்க்டன் மருத்துவ பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஜியாத் அலி.

இந்த ஆய்வில், சிறு நீரகத்திற்கும். நல்ல கொழுப்பு அமிலத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தனர், இதன் முடிவில், நல்ல கொழுப்பு அமிலங்கள் அளவிற்கு அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறுகின்றனர்.

English summary

Excess Good cholesterol may shorten your life

Excess Good cholesterol may shorten your life
Story first published: Saturday, August 13, 2016, 12:05 [IST]
Desktop Bottom Promotion