For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் இதய நோய் இந்தியாவில்தான் அதிகம்! உங்களுக்கு தெரியுமா?

|

உலக அளவில் இந்தியாவில்தான் அதிகமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 300 % சதவீதம் இதய நோய்கள் இந்தியாவில் அதிகமடைந்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் விஷயம்.

இந்தியாவில் இதய நோயால் பெருமளவு மக்கள் பாதிக்கபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிருக்கின்றனர் என்று தாமஸ் அலக்ஸான்டர் என்ற மருத்துவர் இதயம் மற்றும் இதய நோய்கள் தொடர்பாக நடந்த கருத்தரங்கில் (STEMI) கூறியுள்ளார்.

CAD raised up by 300 % in India

இந்தியாவில் 60 மில்லியன் மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 மில்லியன் 40 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் 10 மில்லியன் 30 வயதிற்கும் குறைவானவர்கள் என்று வருத்தமாக கூறியுள்ளார்.

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் எனப்படும் (CAD) அர்த்ரோஸ்கெலரோஸிஸ் உயிருக்கு ஆபத்தை தருவிக்கும் நோய். உலக அளவில் உடல் நலம் சார்ந்த அமைப்பான WHO வின் கருத்துப்படி, இந்த நோயிலிருந்து தங்கள் உயிரினை காப்பாற்றிக் கொள்ள வருடத்திற்கு 3 மில்லியன் நோயாளிகள் போராடுகிறார்கள்.

STEMI என்ற இதய நோய்களின் விழிப்புணர்வு பற்றி கருத்தரங்கில் பல்வேறு மருத்துவர்கள் பங்குபெற்றனர். அனைவரும் இந்தியாவிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேவை புரிபவர்கள்.

இந்த கருத்தரங்கில், இதய அடைப்பு, மற்றும் மற்ற இதய பாதிப்புகளைப் பற்றிய விழுப்புணர்வை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றிய அறிவுரைகளை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளனர்.

மேலும் மாரடைப்பு வந்தவுடன் முதலுதவி செய்வதற்கென 700 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தென்னிந்தியா முழுவதும் பயிற்சிகள் அளிக்கப்படுவதுதான் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமே என்று பெங்களூரு ஜயதேவா மருத்துவமனையின் டைரக்டர் மஞ்சு நாத் தெரிவித்துள்ளார்.

English summary

CAD raised up by 300 % in India

CAD raised up by 300 % in India
Story first published: Wednesday, July 13, 2016, 14:33 [IST]
Desktop Bottom Promotion