For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் நொறுக்குத் தீனிகள்!!!

By Ashok CR
|

நமது உடலில் உள்ள உறுப்புகளில் இதயமே, நாம் உயிரோடும், துடிப்போடும் வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ரத்தஓட்டம் தடையின்றி நடைபெறுவதற்கு இதயமே ஆதாரமானது. இதயத்துடிப்பே, உயிர் வாழ்வதற்கு, முதன்மையான மற்றும் இன்றியமையாத செயலாகும். இதயத்தில் ஏதேனும் சிறிய பழுது ஏற்பட்டாலும் அது நமது உடல் இயக்கத்தில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமான இதயமே, ஆரோக்கியமான மற்றும் நீண்ட வாழ்வை நமக்குத் தரும்.

இதய நோய்கள் மற்றும் பிரச்சனைகள் பரம்பரை காரணமாகவும், மரபியல் ரீதியாகவும் மற்றும் வளர்ந்து வரும் பிற காரணங்களாலும், பெரும்பாலும் எற்படுகின்றன. முதல் இருவகையான இதய கோளாறுகளுக்கு, வரும் முன் காப்பதற்கு போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் பிற காரணங்களுக்கு சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றி அதை தடை செய்யலாம்.

இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்!!!

இதய நோய்க்கான முக்கிய காரணங்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு முறை மற்றும் போதை பழக்கம் போன்றவையே ஆகும். இவை இதய தாக்கத்தையும், மிகை கொலஸ்ட்ரால் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு முறைகளால் இதய நோய்களை தவிர்க்கலாம். இதில் உணவு பழக்கங்கள் மிக முக்கியமானது. இதயத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், நல்ல உணவு முறை மற்றும் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாகவும், நல்ல முறையிலும் வைத்திருக்க முடியும். பல ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை தினசரி உண்பதன் மூலம், இதயத்தின் ஆரோக்கியத்தை பேணலாம். இவ்வாறான நொறுக்கு தீனிகளை உண்பதன் மூலம், இதயத்தின் இயக்கத்தை தூண்டி மேம்படுத்தலாம்.

இங்கே இதயத்தின் ஆரோக்கியத்திற்கான நொறுக்குத் தீனிகள் சில கொடுக்கப் பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் அல்லது ஓட்ஸ் தானியங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ராலை குறைப்பது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓட்சில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா அமிலங்கள் போன்றவை அடங்கி உள்ளன. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. எனவே ஓட்ஸ் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த, சிறந்த காலை உணவு. இதயத்தின் ஆரோக்கியத்திற்காக,நமது வழக்கமான உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ப்ரௌன் பிரட் சாண்ட்விச்

ப்ரௌன் பிரட் சாண்ட்விச்

பொதுவாக முழு தானியங்களில், வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் நிறைந்த நிறமி அதிக அளவில் அடங்கி உள்ளன. இவை இதயத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரௌன் பிரட்டானது, முழு தானியங்களால் செய்யப்படுகிறது. இது போலவே காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் மற்றும் உடல் நலத்திற்கு தேவையான சத்துகள் அடங்கி உள்ளன. இவை இரண்டும் கலந்து செய்வதால், இது இதயத்தை நல்ல முறையில் பேண ஆரோக்கியமான மிக சிறந்த உணவாக அமைகிறது. ப்ரௌன் பிரட் சாண்ட்விச், பொதுவாக தக்காளி, வெள்ளரி, கீரை இலைகள் மற்றும் வெங்காயம் போன்றவற்றால் தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது. இதயத்தின் நலத்திற்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை விட, இந்த சாண்ட்விச் பல மடங்கு சிறந்தது.

சூப்

சூப்

சூப் விரைவில் தயாரிக்கக்கூடிய, வயிற்றை நிரப்பும் ஆரோக்கியமான சத்துள்ள உணவு. சூப்பானது பல வகையான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப் படுகிறது. கீரை மற்றும் தக்காளி சூப்பில், சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆச்சிடன்ட்கள் அதிக அளவில் அடங்கி உள்ளதால், அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. காய்கறி குழம்பும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறந்த உணவு. சூப்பினை மாலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக் கொள்வது நல்லது.

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய தானியங்களில், கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் வைப்பதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துகள் அதிக அளவில் அடங்கி உள்ளன. ஒரு கிண்ணம் அளவு முளைகெட்டிய தானியங்களோடு, வெங்காயம், தக்காளி மற்றும் மசால் பொருட்கள் கலந்து உண்டால் அது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய தானியங்களில் சுவைக்காக எலுமிச்சை, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். முளைகெட்டிய தானியங்கள், இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த, நீங்கள் இழந்து விடக் கூடாத ஒரு அவசியமான நொறுக்குத் தீனி.

தயிர் மற்றும் பழங்கள்

தயிர் மற்றும் பழங்கள்

தயிர் மற்றும் பழங்கள் கலந்த கலவையானது, ஒரு ஆரோக்கியமான, வயிற்றை நன்கு நிரப்பும், இதயத்திற்கு நல்ல ஆற்றலை அளிக்கும் சிறந்த உணவு. இது குறைந்த அளவு கொலஸ்ட்ராலையும், அதிக அளவில் ஆண்டி ஆச்சிடன்ட்களையும் பெற்றுள்ளது. இதனால் தயிர் மற்றும் பழங்கள் கலந்த கலவை, சுவை மிகுந்த நொறுக்குத்தீனியாக அமைகிறது. இந்த கூட்டு உணவானது,இதயத்திற்கு தேவையான பல நன்மைகளையும், குறைந்த அளவிலான நிறைவுற்ற கொழுப்பையும் பெற்றுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Snacks For Heart

Healthy snacks and diet can help to keep the heart good and healthy. There are many snacks that should be eaten regularly to maintain the heart health. Here some of the heart healthy snacks are given. Take a look.
Desktop Bottom Promotion