இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள்!!!

By:

உடலுக்கு ஏற்படும் தீமைகள் அனைத்தும் பழக்கவழக்கங்களால் தான் வருகின்றன. ஒருவரின் பழக்கவழக்கங்கள் மோசமானதாக இருந்தால், அதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும். குறிப்பாக பழக்கவழக்கங்களில் மோசமானது என்று சொன்னாலேயே அனைவரும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை தான் நினைப்பார்கள். ஆனால் அந்த பழக்கங்கள் மட்டுமின்றி, அன்றாடம் மேற்கொள்ளும் சில சாதாரணமான பழக்கவழக்கங்களாலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். முக்கியமாக இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு தான் இதயம். இந்த இதயம் சரியாக இயங்கினால் தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் ஒருசில சாதாரண பழக்கவழக்கங்களால், இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, நீண்ட டிவி பார்ப்பது, மன அழுத்தம், போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் பல பழக்கவழக்கங்களால், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? மேலும் நிபுணர்களும் போதிய உடல் செயல்பாடுகள் இல்லாவிட்டால், இரத்தக்குழாய்கள் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும் என்று சொல்கின்றனர்.

இப்போது அப்படி இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

குறட்டை

பெரும்பாலானோருக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் பொதுவாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களும் குறட்டை விடுகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த குறட்டையை எப்படி நிறுத்துவது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஈறு பிரச்சனை

நிறைய மக்கள் ஈறுகளை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் ஈறுகளில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஈறுகளில் பிரச்சனை ஏற்பட்டால், அது இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், ஈறுகளை முறையாக பராமரிக்க ஆரம்பியுங்கள்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பவர்களுக்கும், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி. எப்படியெனில், புகைப்பிடிக்கும் போது இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதோடு, இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

தனிமை

நிறைய பேருக்கு தனிமையில் இருப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்வாறு தனிமையில் இருந்தால், தேவையில்லாத எண்ணங்கள் மனதில் தோன்றி, மன இறுக்கத்தை ஏற்படுத்தி, இதயத்திற்கு பெரும் பிரச்சனையைக் கொடுக்கும்

மன அழுத்தம்

இன்றைய அவசர உலகில் மன அழுத்தம் அதிகம் நிறைந்துள்ளது. பொதுவாக அவசரம் அதிகரித்தால், தானாகவே மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால் இதயம் பலவீனமடையும். ஆகவே எதையும் பொறுமையாக செய்ய முயலவும்.

போதிய உடற்பயிற்சியின்மை

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, இதயமும் நன்கு சீராக செயல்படும். எனவே எப்போதும் தூங்கி தூங்கி எழாமல், தினமும் உடற்பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹாலை அளவாக பருகினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அந்த ஆல்கஹாலின் அளவு அதிகரித்தால், அதுவே இதயத்திற்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

அதிகப்படியாக உணவு உட்கொள்ளுதல்

ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவுகளை உட்கொள்வது மிகவும் கெட்ட பழக்கம். இதனால் உடல் எடை மட்டும் அதிகரிக்காமல், இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எப்படியெனில், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள், அதிகப்படியான கலோரிகள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை.

மாட்டுக்கறி

மாட்டுக்கறியை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால், நல்லது. ஆனால், அதையே தினமும் உட்கொண்டால், அது இதய நோய்க்கு தான் வழிவகுக்கும். ஏனெனில் அதில் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்த்தல்

தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய அத்தியாசவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உப்பை அதிகம் எடுத்துக் கொள்வது

உணவில் உப்பை அதிகம் எடுத்துக் கொண்டால், அது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைத்து, சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

See next photo feature article

ஜங்க் உணவுகள்

தற்போது ஜிங்க் உணவுகளை உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த உணவில் வெறும் கொழுப்புக்கள், கலோரிகள் மட்டும் தான் இருப்பதால், அதனை உட்கொள்ளும் போது, உடலில் கொழுப்புக்கள் தங்கிவிடுகின்றன.

Read more about: health, heart, heart disease, ஆரோக்கியம், இதயம், இதய நோய்
English summary

Habits That Trouble Your Heart Health

Here is a list of habits that trouble your heart health. Check out the slide show and find out if you have such habits.
Story first published: Thursday, September 19, 2013, 11:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter