For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!

By Mayura Akilan
|

Work stress
மாரடைப்பு என்பது வயதானவர்களுக்குத்தான் வரும் என்ற காலம் மாறி இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் பணிச்சுமையினால்தான் இதயநோய்க்கு ஆளாகின்றனர் இளைஞர்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு.

இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 23 சதவிகிதம் பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பணிச்சுமைதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வீட்டைவிட்டு வெளியே போனால் ஆண்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஆனால் பணிபுரியும் இடங்களில் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.

பள்ளியில் தொடங்கும் ஓட்டம் வளர்ந்து பெரியவர்களாகி வேலையில் சேர்ந்த பின்னரும் அவர்களுக்கு தொடர்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் இரவில் அதிகம் கண்விழிக்கின்றனர். அதிகாலையில் பிறர் விழிக்கிற நேரம் தூங்குவதும், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடற்பயிற்சியே செய்யாமல் புது வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இதுவே அவர்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

இது தவிர காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. ‘ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க. இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 களில் இதயநோய் ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இதயநோயை தவிர்க்கலாம்

மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது. தன் மனதை புரிந்தவர்களிடம் மனம் விட்டு பேசலாம். பணத்தின் பின்னால் ஒடுவதால்தான் மனஅழுத்தத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. எனவே சக்திக்குத் தகுந்த வேலையை மட்டுமே செய்யுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி செய்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

Work stress 'raises heart risk' | வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!

Having a highly demanding job, but little control over it, could be a deadly combination, UK researchers say. They analysed 13 existing European studies covering nearly 200,000 people and found "job strain" was linked to a 23% increased risk of heart attacks and deaths from coronary heart disease.
Story first published: Monday, December 3, 2012, 12:42 [IST]
Desktop Bottom Promotion