For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரிசி உணவை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்!! எப்படி தெரியுமா?

அரிசி உணவுவகைகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஆனால் எப்படி எந்த வடிவத்தில் சாப்பிடுகிறீர்கல் என்பது முக்கிஉயம் என இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

டயட்டா? உடனே முதல் வேலையாக அரிசி சாப்பாடை நிறுத்தனும். சப்பாத்திக்கு மாறனும். இதுதான் மாறா விதி என பலரும் நினைப்பார்கள்.

May eating rice cause to weight loss

அரிசி உணவுகள் உடல் எடையை கூட்டும். சர்க்கரை வியாதியை தரும் என பலரும் முதல் குற்றவாளியாக சுட்டிக் காட்டுவது அரிசியைத்தான். ஆனால் குற்றவாளி நாம்தான்.

சாப்பிட்ட உணவிற்கு தகுந்தாற்போல் வேலை செய்யாமல், நாள்முழுவதும் உட்கார்ந்தபடியே இருந்துவிட்டு பழியை அரிசி மீது போட்டுவிடுகிறோம். அரிசி உணவை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு அரிசியின் பாகங்கள் :

முழு அரிசியின் பாகங்கள் :

பொதுவாக முழு அரிசியில் தவிடு, சத்து நிறைந்த நுண்ணுயிர் ஆகிய்வற்றை கொண்டுள்ளது. அரிசியில் உள்ள தவிட்டில் அதிக நார்சத்து உள்ளது. அதோடு விட்டமின் பி'யும் உள்ளது.

சிவப்பு அரிசி

சிவப்பு அரிசி

ஜெர்ம் எனப்படும் நுண்ணுயிர் அரிசியில் உள்ளது. அது அதிகப்படியான விட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டை கொண்டுள்ளது. இது முழு அரிசியில் உள்ளது. இதனை சிவப்பு அரிசி என்று நாம் கூறுகிறோம்.

வெள்ளை அரிசி :

வெள்ளை அரிசி :

முழு அல்லது சிவப்பு அரிசியை பாலிஷ் செய்யும்போது அரிசியிலுள்ள ஜெர்ம் மற்றும் தவிடு முழுமையாக நீக்கப்படுவதால் அதில் வெறும் மாவுச் சத்து மட்டுமே இருக்கிறது. போதுமான உடல் உழைப்பு இல்லாதபோது இவையே உடல் பருமனுக்கு காரணாகிறது.

 சிவப்பு அரிசி எவ்வாறு உடல் எடையை குறைக்கிறது?

சிவப்பு அரிசி எவ்வாறு உடல் எடையை குறைக்கிறது?

12 வருடகால ஆராய்ச்சியில் சிவப்பு அரிசியை மட்டுமே சாப்பிட்டவர்களுக்கு உடல் எடை கூடாமல் ஒரே அளவில் இருந்தது. அதில் உள்ள மிக முக்கிய சத்துக்கள் உடலுக்கு கிடைத்ததால் சீராக கலோரி எரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் காக்கப்படுகிறது.

ஆய்வு :

ஆய்வு :

அதிக உடல்பருமன் கொண்ட கொரியன் நாட்டு பெண்களுக்கு தொடர்ந்து சிவப்பு அரிசி உணவு வழங்கப்பட்டு பார்த்த போது அவர்களின் உடல் எடை கணிசமாக குறைந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆகவெ வெள்ளை அரிசியை தவிர்த்து சிவப்பு அரிசியை உண்டால் உடல் எடை குறையும். நோய்களும் குறையும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

May eating rice cause to weight loss?

Eating brown rice is associated with weight loss and low blood fat level.
Desktop Bottom Promotion