For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொன்னா நம்பமாட்டீங்க... இந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா?

இங்கு எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்காத உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

|

நாம் சாப்பிடும் ஒருசில உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது என்பது தெரியுமா? ஆம், பொதுவாக நாம் உணவுகளை அளவுக்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று தான் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் ஒருசில உணவுகளில் உள்ள வளமான நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் காரணமாக, உடல் எடையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

இக்கட்டுரையில் எந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், அந்த உணவுகளை உட்கொண்டு எடை குறைக்கும் டயட்டினால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு, கிரேப் ஃபுரூட்

ஆரஞ்சு, கிரேப் ஃபுரூட்

இந்த பழங்களில் உள்ள நார்ச்சத்து, ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின் சி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும், சரும நிறத்தை அதிகரிக்கும். அதிலும் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இந்த பழங்கள் மிகவும் நல்லது.

தர்பூசணி

தர்பூசணி

ஒரு துண்டு தர்பூசணியில் 60-70 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது உடலினுள் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும்.

பாசிகள்

பாசிகள்

ஸ்பைரூலினா, கடற்பாசி போன்றவற்றில் அயோடின் அதிகம் உள்ளது. பொதுவாக இந்த பாசிகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி, ஹார்மோன்களின் சுரப்பை சமநிலையாக வைத்திருக்கும். உடல் எடையைக் குறைப்பதற்கு இதுவே மிகவும் அவசியமானது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

காய்கறிகளுள் எடையைக் குறைக்க உதவும் மிகவும் சிறப்பான ஒன்று என்றால், அது வெள்ளரிக்காய். இது உடல் வீக்கமடைவதைக் குறைத்து, ஃபிட்டாக வைத்துக் கொள்ளும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் மாங்கனீசு மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இந்த வேர் காய்கறியானது கொழுப்புக்களைக் கரைக்கும், தசைகளை வலிமைப்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

முட்டை

முட்டை

பலரும் முட்டையை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. மேலும் முட்டையை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக முட்டையை பொரித்து சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

அன்னாசி

அன்னாசி

எடையைக் குறைக்க நினைப்போருக்கு இப்பழம் மிகச்சிறந்த நண்பன் எனலாம். ஏனெனில் அன்னாசியில் உள்ள புரோமிலைன் கொழுப்புக்களை உடைப்பதோடு, புரோட்டீனை எளிதில் செரிமானமடையச் செய்யும்.

ஆப்பிள் மற்றும் ப்ளம்ஸ்

ஆப்பிள் மற்றும் ப்ளம்ஸ்

ஒரு ஆப்பிளில் 50 கலோரிகள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்தும். மேலும் ப்ளம்ஸில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. இவை இதயத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது.

சாலட்

சாலட்

சாலட்டுகளில் ஃபோலிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் ஒரு லெட்யூஸ் இலையில் 3 கலோரிகள் தான் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி

இந்த பழங்களில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது செரிமான மண்டலம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவர்

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவர்

இந்த மூன்று காய்கறிகளையும் எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரிக்காது. ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Can Eat A Lot Of And Still Not Gain Weight

Here are some foods you can eat a lot of and still not gain weight. Read on to know more about it...
Story first published: Tuesday, May 23, 2017, 10:15 [IST]
Desktop Bottom Promotion