மதியம் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?

நல்ல உணவு நல்ல ஆரோக்கியத்தை தரும். மோசமான பழக்க வழக்கங்களால் ஆரோக்கியம் சீர்கெடுவதின்றி மனதளவிலும் பாதிப்பை தரும். அவ்வகையில் மதியம் நீங்கள் சாப்பிடக் கூடாத உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.

Subscribe to Boldsky

மதியம் நல்ல காய்கறிகள் கொண்டு சமைக்கப்பட்ட சாம்பார், ரசம் பொறியல் என கூட்டுக் கலவையாக சாப்பிடுவது எல்லாம் மறந்தாயிற்று எல்லாரும் வேலை. பிஸி என இருப்பதால் டயட் என்று வரும்போது நாம் மத்தியானத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டோம்.

காலையில் சரியாக சாப்பிடாமல் மதியம் கண்ணில் படுவதை பிடிபிடிப்போம். மதியம் நாம் சாப்பிடும் சிலவகை உணவுகளாலும் உடல் எடை கூறும் என கூறுகின்றனர்.

Foods that you should not eat for lunch

காரணம் சிலவகை உணவுகள் கெட்ட கொழுப்பை அதிகம் உற்பத்தி செய்கின்றன. கலோரியை அதிகபப்டுத்தும். மதியத்தின் பிறகு அதிக வேலைப்பளு இல்லாதவரகளுக்கு கட்டாயம் அவை உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும். அவ்வகையில் நீங்கள் சாப்பிடக் கூடாத உணவுகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பாஸ்தா :

பாஸ்தா உணவுகள் அதிக சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது. இவை உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத தூக்கத்தை தரும். அதோடு உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

முந்தைய நாள் உணவு :

மீதமிருக்கிறதே என முந்தைய இரவு உணவுகளை அடுத்த நாள் மதியம் பலரும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. ஏனென்றால் அவை உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். நச்சுக்களையும் பெருக்கும்.

பர்கர் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள் :

பர்கர் மற்றும் வறுக்கப்பட உணவுகளில் தீங்கை விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் உள்ளது. மதிய நேரத்தில் அவற்றை உண்பது மிகவும் கேடானது.

சாண்ட்விச் உணவுகள் :

சாண்ட்விச் உணவுகளில் சீஸ், வெண்ணெய் ஆகியவை இருந்தால் அதிக கொழுப்பை உற்பத்தி செய்கின்றன. அதோடு மற்ற சத்துக்களை உறிய விடாமல் செய்யும்.

காய்கறி சூப் :

காய்கறி சூப் மிகவும் நல்லது. குறைந்த கலோரி என்றாலும் அவற்றில் புரதச் சத்து மிகக் குறைவு. அதோடு அளவான நல்ல கொழுப்பும் புரதமும் நமது உடலின் சத்துக்களை சமன் செய்ய வேண்டுமென்பதால் சூப்பை தவிர்க்கலாம்.

கேக் :

கேக் அதிக கெட்ட கொழுப்பை கொண்டது. அதோடு கலோரியையும் அதிகரிக்கச் செய்யும். அதிலுள்ள சர்க்கரை மற்றும் மற்ற மைதா பொருட்கள் உடலுக்கு மோசமன பாதிப்பையே தரும். இதனையும் மதியம் சமயத்தில் தவிர்ப்பது நல்லது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Foods that you should not eat for lunch

Foods that you should not eat for lunch
Please Wait while comments are loading...
Subscribe Newsletter