For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பை, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் உணவுகள்!

இங்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உணவுகள் மருந்தாக முடியுமா? அதிலும் தொப்பை, உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளையும் உணவுகள் மூலம் சரிசெய்ய முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.

Foods That You Need To Eat To Fight Metabolic Syndrome

மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்னும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட 50% வைட்டமின் ஈ சத்துக்கள் அவசியமாக உள்ளது. ஏனெனில் இந்த பிரச்சனை உள்ளவர்களது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலை மற்றும் அழற்சியின் அளவு அதிகமாக இருக்கும். இதனை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிக்க வைட்டமின் ஈ என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உதவும்.

ஒருவருக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருந்தால், அவர்கள் இதய நோய், சர்க்கரை நோய், தொப்பை போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளவர்கள், வைட்டமின் ஈ சத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோதுமை எண்ணெய்

கோதுமை எண்ணெய்

இந்த எண்ணெய் கோதுமையின் தவிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இந்த எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் ஈ சத்தைப் பெறலாம்.

 சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை

ஒரு கையளவு சூரியகாந்தி விதையில் அன்றாடம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ சத்தில் 40% கிடைக்கும். இந்த விதைகளை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவதன் மூலம், மெட்டபாலிக் சிண்ட்ரோமில் இருந்து விடுபடலாம்.

பாதாம்

பாதாம்

பாதாமில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது. அதற்கு இந்த நட்ஸை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதும்.

ஹாசில் நட்ஸ்

ஹாசில் நட்ஸ்

ஹாசில் நட்ஸிலும் வைட்டமின் ஈ சத்துள்ளது. இதனை ஒருவர் தினமும் சிறிது சாப்பிட்டால், மெட்டபாலிக் சிண்ட்ரோம் எப்படி மாயமாய் குணமாகிறது என்று தெரியும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

ஒரு கப் பசலைக்கீரையில் அன்றாடம் வேண்டிய வைட்டமின் ஈ சத்தில் 20% கிடைக்கும். அதிலும் இதனை வேக வைத்து கடைந்து சாதத்துடன் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ஒரு கப் வேக வைத்த ப்ராக்கோலியில் 15% வைட்டமின் ஈ சத்தைப் பெறலாம். எனவே முடிந்த அளவு இதையும், அடிக்கடி உணவில் சேர்த்து பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That You Need To Eat To Fight Metabolic Syndrome

Have these best foods that will help to combat metabolic syndrome naturally. Read this article to find out.
Story first published: Tuesday, March 14, 2017, 15:18 [IST]
Desktop Bottom Promotion