For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கல்லீரல் பத்திரமா இருக்கனும்னா இந்த 8 உணவை உங்க டயட்டுல சேர்த்துக்கோங்க

கல்லீரலை பாதுகாக்க நீங்கள் சாப்பிட வேண்டிய முக்கிய 7 உணவுகள் எவை மற்றும் அவை எவ்வாறு கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

கல்லீரல் செய்யும் வேலையில் பாதி கூட நாம வெளியில் செய்வதில்லை. ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இரவு நேரத்தில் கூட நச்சுக்களையும் கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறு நீரகத்திற்கு அனுப்பும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும்.

பெண்களுக்கு மாதவிடாயை ஒழுங்குபடுத்தவும் கல்லீரல்தான் தேவை, ஆனால் நாம் நாக்கிற்கு பிடித்தாற்போல் கண்டதையும் சாப்பிட்டு கல்லீரலுக்கு துரோகம் செய்கிறோம்.

Foods that take good care of your Liver

உங்கள் கல்லீரலுக்கு ஃப்ரெண்ட்லியான உணவுகள் எவை யென தெரிந்து அவற்றை தினமும் தொடருங்கள். கல்லீரலை பலப்படுத்தும் சில உணவுகளை இங்கே பட்டியிலிட்டுள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை கீரைகள் :

பச்சை கீரைகள் :

பச்சைக் கீரைகளை வாரம் 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும். அதில் உள்ள குளோரோஃபில் நச்சுக்களை வெளியேற்றும். நச்சு வாய்ந்த ரசாயனங்களை வீரியமிழக்கச் செய்யும்.

தேன் :

தேன் :

தேன் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கல்லீரலில் உருவாகும் பேக்டீரியாக்களை அழிக்கிறது.

பூண்டு :

பூண்டு :

பூண்டிலுள்ள அலிசின் கல்லீரலில் ஏபடும் சேதாரங்களை குணப்படுத்துகிறது.

பெர்ரி மற்றும் மெலன் பழங்கள் :

பெர்ரி மற்றும் மெலன் பழங்கள் :

பெர்ரி மற்றும் தர்பூசணி வகை சார்ந்த பழங்களில் அதிக மினரல்கள் இருப்பதால் அவை ஹீமோகுளோபின் போல் செயல்பட்டு ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பீட்ரூட் மற்றும் கேரட் :

பீட்ரூட் மற்றும் கேரட் :

இவற்றில் அதிக ஃப்ளேவனாய்டு மற்றும் பீட்டா கரோடின் இருப்பதால் இவை இரைப்பையின் செய்லதிறனை அதிகரிக்கச் செய்கிறது.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீயிலுள்ள கேட்டெசின் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் கல்லீரல் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. இரைப்பை மற்றும் குடல்களின் பாரத்தை குறைக்கிறது.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

இதில் நல்ல கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு கேடு தராது. இதிலுள்ள கொழுப்பு உடலுக்கு அத்யாவசியமானது. இது கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்கிறது.

ஆப்பிள் மற்றும் சைடர் வினிகர் :

ஆப்பிள் மற்றும் சைடர் வினிகர் :

ஆப்பிள் நச்சுக்களை அகற்றி ஜீரண உறுப்புகளை சுத்தபப்டுத்துகிறது. ஆப்பிள் சைடர் சிங்கர் மற்றும் யோகார்ட் போன்றவை கல்லீரலுக்கு நன்மைகளை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that take good care of your Liver

Foods that take good care of your Liver
Story first published: Friday, May 5, 2017, 10:47 [IST]
Desktop Bottom Promotion