For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டைக்கு நிகரான சத்துக்களை அளிக்கும், 13 ஆரோக்கியமான உணவுகள்!

முட்டைக்கு பதிலாக நீங்கள் இந்த 13 ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கிய பயன்கள் பெறலாம்.

By Lakshmi
|

முட்டை பல தரப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவும், பல உணவு வகைகளுடன் சேர்த்துக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.

ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக முட்டையை சிலர் தவிர்க்கின்றனர். ஆனால் அவர்களுக்காக அதிர்ஷ்டவசமாக முட்டையின் சத்துக்களை உள்ளடக்கிய சில பொருட்கள் உள்ளன.

முட்டைக்கு பதிலாக வேறு என்னென்ன சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்!

முட்டையை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்!

முட்டையை உணவிலிருந்து தவிர்க்க பல காரணங்கள் இருக்கின்றன. அலர்ஜி மற்றும் உணவுக்கட்டுப்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.

குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உருவாக்கும் இரண்டாவது பெரிய உணவாக முட்டை உள்ளது.

ஒரு ஆய்வில், 50% குழந்தைகளுக்கு அவர்களது மூன்று வயதிலும், 66% குழந்தைகளுக்கு 5 வயதிலும் அலர்ஜி அதிகரிப்பதாகவும் கூறுகிறது.

பிற ஆய்வுகள் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முட்டையால் ஏற்படும் அலர்ஜியால் பாதிக்கப்படுவதாக கூறுகிறது.

சில குழந்தைகள் முட்டையினால் ஏற்படும் ஒவ்வாமையை நீண்ட நாட்கள் பொருட்படுத்தாமல் இருக்கும் போது, அது வாழ்நாள் முழுவது தொடரும் ஒன்றாக மாறிவிடுகிறது.

சைவ உணவுப்பழக்கம்!

சைவ உணவுப்பழக்கம்!

சிலர் சைவ உணவு முறைகளை கடைப்பிடிப்பார்கள். இறைச்சி, முட்டை என மிருங்களில் இருந்து கிடைக்கும் எந்த வித உணவையும் உட்க்கொள்ளாமல் இருப்பார்கள்.

சைவர்கள் சில காரணங்களுக்காக மிருகங்களிடமிருந்து கிடைக்கும் உணவை சாப்பிடாமல் இருக்கிறார்கள். அது ஆரோக்கியத்திற்காக, சுற்றுசூழல் அல்லது விலங்கு உரிமைகள் தொடர்பான நெறிமுறை காரணங்களாக இருக்கலாம்.

ஏன் முட்டைகளை பேக்கிங்கில் பயன்படுத்துகின்றனர்?

ஏன் முட்டைகளை பேக்கிங்கில் பயன்படுத்துகின்றனர்?

முட்டைகளை பல நோக்கங்களுக்காக பேக்கிங்கில் பயன்படுத்துகின்றனர். அவை கட்டமைப்பு, வண்ணம், சுவை மற்றும் வேக வைத்த பொருட்களின் நிலைபாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

பைண்டிங்: இவை உணவுப்பொருட்களை ஒன்றொடு ஒன்று இணைக்கின்றன. உணவுக்குரிய அமைப்பை கொடுக்கின்றன.

ஈரப்பதம்: முட்டையில் உள்ள திரவமானது உணவில் உள்ள எல்லாப் பொருட்களையும் தன்னுடன் ஈர்த்துக்கொள்கிறது. இது உணவு ஈரபதத்துடன் இருக்க உதவுகிறது.

சுவை மற்றும் தோற்றம்: முட்டை பிற பொருட்களின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது மேலும், சூடாக்கும் போது பிரவுன் நிறத்தை கொடுத்து உணவுப்பொருளின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

ஆப்பிள் சாஸ்

ஆப்பிள் சாஸ்

ஆப்பிள் சாஸ் வேகவைத்த ஆப்பிள்களில் இருந்து பெறப்படுகிறது. பின்னர் இது இனிப்பு சுவை அல்லது ஜாதிக்காய் அல்லது இலவங்கப்பட்டை கொண்டு சுவையூட்டப்படுகிறது.

நான்கில் ஒரு பங்கு (65 கிராம்) ஆப்பிள் சாஸ் முட்டைக்கு பதிலாக உணவில் சேர்க்கப்படுகிறது.

சக்கரை அல்லாத ஆப்பிள் சாஸ் சிறந்தது. நீங்கள் இனிப்பு சேர்க்கப்பட்டிருந்தால், குறைந்த அளவு இனிப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மசித்த வாழைப்பழம்

மசித்த வாழைப்பழம்

மசித்த வாழைப்பழம் முட்டைக்கு மாற்றாக சேர்க்க மற்றுமொரு சிறந்த பொருளாகும்.

மசித்த வாழைப்பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களையும் சேர்க்கலாம். இதனை நான்கில் ஒரு பகுதி (65கிராம்) அளவு முட்டைக்கு பதிலாக சேர்க்கலாம்.

இது கேக்குகள் மற்றும் ரொட்டிகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள்

ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள்

ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் இவை இரண்டுமே அதிகப்படியான சத்துக்களை கொண்டுள்ளன.

இவற்றில் அதிகமாக ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஃபைபர் மற்றும் பிற தனிப்பட்ட தாவர கலவைகள் அடங்கியுள்ளது.

நீங்கள் இந்த விதைகளை வீட்டிலேயே அரைத்துக்கொள்ளலாம். அல்லது கடைகளில் அரைத்த விதைகளை வாங்கிக்கொள்ளலாம்.

முட்டைக்கு பதிலாக 1மேசைக்கரண்டி சியா விதைகள் அல்லது ஆளி விதைகளை 3 மேசைக்கரண்டி தண்ணீருடன் பயன்படுத்தலாம்.

சந்தைகளில் கிடைக்கும் முட்டை மாற்று

சந்தைகளில் கிடைக்கும் முட்டை மாற்று

முட்டைக்கான மாற்று பொருட்கள் சந்தைகளில் நிறைய விதமாக கிடைக்கின்றன. இவை பொதுவாக உருளைக்கிழங்கு ஸ்டார்ச், டேபியோகா ஸ்டார்ச் மற்றும் லீவிங் ஏஜெண்ட்ஸ்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

இந்த முட்டை மாற்று பொருட்கள் எல்லா விதமான பேக்கிங் பொருட்களுக்கும் ஏற்றது. மேலும் இவை உணவின் சுவையை மாற்றுவதில்லை.

1.5 மேசைக்கரண்டி பவுடருடன் 2 முதல் 3 மேசைக்கரண்டி தண்ணீர் கலந்து முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

சில்கென் டோஃபு

சில்கென் டோஃபு

டோஃபு என்பது பதப்படுத்தப்பட்ட சோயா பால் இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அழுத்தம் கொடுக்க பயன்படுகிறது.

டோஃபுவின் அமைப்பு அதன் நீரின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேறுபடுகிறது. இது உணவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி நீரை ஈர்த்துக்கொள்கிறது.

இது அதிக ஈரப்பதமான தன்மையை கொண்டுள்ளது. எனவே இது உணவுப்பொருளுக்கு மென்மையை கொடுக்கிறது.

முட்டைக்கு பதிலாக நான்கில் ஒரு கப் (60 கிராம்) அளவு டோஃபு சேர்க்கலாம்

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் 1 மேசைக்கரண்டி வினிகரை முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது பொதுவாக காற்றுப்பைகளில் அடைக்கக்கூடிய உணவுகளில் பயன்படுகிறது.

தயிர் அல்லது மோர்

தயிர் அல்லது மோர்

தயிர் அல்லது மோர் இரண்டுமே முட்டைக்கு பதிலாக பயன்படுகிறது. நான்கில் ஒரு பகுதி (60கிராம்) அளவு தயிர் அல்லது மோரை முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது கேக்குகள் மற்றும் கப் கேக்குகள் செய்ய பயன்படுகிறது.

கிழங்கு வகை பவுடர்

கிழங்கு வகை பவுடர்

ஆரோரூட் என்பது தென் அமெரிக்க கிழங்கு தாவரம் ஆகும், இதில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. மாவு வேதியியலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பொருள். இது மாவு பேன்று விற்க்கப்படுகிறது.

2 மேசைக்கரண்டி கிழங்கு வகை பவுடர் மற்றும் 3 மேசைக்கரண்டி தண்ணீர் முட்டைக்கு மாற்றாக பயன்படுகிறது.

அக்வாபாபா(Aquafaba)

அக்வாபாபா(Aquafaba)

அக்வாபாபா என்பது சமையல் பீன்ஸ் அல்லது பருப்பு வகைகளிலிருந்து மீதமுள்ள திரவமாகும். இது தேனீக்கள் அல்லது பீன்ஸ் வகைகளில் காணப்படும் திரவமாகும்.

3 மேசைக்கரண்டி(45 கிராம்) அளவு அக்வாபாபா ஒரு முழு முட்டை அல்லது முட்டையின் வெள்ளைக்கருவாக பயன்படுத்தப்படுகிறது.

நட் பட்டர்:

நட் பட்டர்:

வேர்க்கடலை, முந்திரி அல்லது பாதாம் வெண்ணெய் போன்ற நட் பட்டர்களை பெரும்பாலான சமையல் வகைகளில் முட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

முட்டைக்கு மாற்றாக 3 மேசைக்கரண்டி(60 கிராம்) அளவு நட் பட்டரை உபயோகிக்கலாம். இது நட்ஸ் சுவையை தரும்.

கார்பனேட் நீர்

கார்பனேட் நீர்

கார்பனேற்றப்பட்ட நீர் உணவிற்கு ஈரபதத்தை அளிக்கிறது. இது உணவிற்கு பஞ்சு போன்ற அமைப்பை தருகிறது. நான்கில் ஒரு பங்கு அளவு (60கிராம்) அளவு முட்டைகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

இது கேக், கப் கேக்குகள், வேகமாக தயாரிக்கப்படும் ரொட்டி ஆகியவைகளில் பயன்படுகிறது.

ஆகர் ஆகர் (Agar-Agar) அல்லது ஜெலட்டின் பவுடர்:

ஆகர் ஆகர் (Agar-Agar) அல்லது ஜெலட்டின் பவுடர்:

இது முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. எனினும், இது பொதுவாக பன்றிகள் மற்றும் பசுக்கள் கொலாஜன் இருந்து பெறப்பட்ட ஒரு விலங்கு புரதம் தான். விலங்கைத் தவிர்த்தால், ஆகர் ஆகர் என்பது கடற்பாசி அல்லது பாசி வகைகளில் இருந்து பெறப்பட்ட ஒரு மாற்று ஆகும்.

ஒரு மேசைக்கரண்டி (9கிராம்) ஜெலட்டின் பவுடர் மற்றும் 3 மேசைக்கரண்டி அளவு நீர் முட்டைக்கு மாற்றாக பயன்படுகிறது.

சோயா லெசித்தின்!

சோயா லெசித்தின்!

சோயா லெசித்தின் என்பது ஒரு சோயா எண்ணெய் இந்த எண்ணெய்யானது முட்டைகளை ஒத்த தன்மை கொண்டது. ஒன்றாக இணைந்து கொள்ளும் திறன் காரணமாக வணிக ரீதியாக தயாரிக்கப்படும் பொருட்களில் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இது பவுடராகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மேசைக்கரண்டி அளவு (14கிராம்) சோயா லெசித்தின் முட்டைக்கு பதிலாக சேர்க்கப்படுகிறது.

முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு மட்டும் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு மட்டும் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

சில ரெசிபிகளில் முழு முட்டை சேர்க்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு மட்டும் சேர்க்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?

இங்கே சில மாற்று வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

வெள்ளைக்கரு: அக்குவாபாபா சிறந்த தீர்வாக அமையும். இதனை 3 தேக்கரண்டி அளவு முட்டைக்கு பதிலாக சேர்க்கலாம்.

மஞ்சள் கரு: சோயா லெசித்தின் ஒரு சிறந்த தீர்வாக அமையும். பெரிய மஞ்சள் கருவிக்கு பதிலாக ஒரு மேசைக்கரண்டி (14கிராம்) சேர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Substitutes for Eggs!

Eggs are incredibly healthy and versatile, making them a popular food for many. Here are the thirteen Effective Substitutes for Eggs, Take a look
Desktop Bottom Promotion