For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலக சிறுநீரக தினம் - இதோ சிறுநீரக கற்களை வேகமாக கரைக்கும் பானங்கள்!

By Maha
|

உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கிய பணியைச் செய்கின்றன. தற்போது அத்தகைய சிறுநீரகங்களில் பல பிரச்சனைகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர். அதில் ஒன்று சிறுநீரக கற்கள்.

இந்த சிறுநீரக கற்கள் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களினால் உருவாகுபவை. சிறுநீரக கற்கள் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களினாலும், பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரக்கூடும்.

சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இன்று உலக சிறுநீரக தினம் என்பதால், சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி டீ

துளசி டீ

துளசி டீ அல்லது ஜூஸ் சிறுநீரகங்களுக்கு நல்லது. இது சிறுநீரகங்களை சுத்தம் செய்து, வலிமைப்படுத்தும். மேலும் துளசி இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். துளசியில் அசிட்டிக் அமிலம் உள்ளதால் இது சிறுநீரக கற்களை உடைத்தெரியும். துளசி டீயை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

மாதுளையை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து கூட குடிக்கலாம். இதனால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். மேலும் மாதுளை சிறுநீரில் உள்ள அசிடிட்டியின் அளவைக் குறைக்கும் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

சிறுநீரக கல் உள்ளவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் கரைத்துவிடும். இந்த கலவையை சிறுநீரக கற்கள் வெளியேறிய பின்னரும் குடித்து வர வேண்டும். இதனால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

திராட்சை ஜூஸ்

திராட்சை ஜூஸ்

திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள் அதிகம் உள்ளதால், அது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்களைக் கரைத்துவிடும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பது, அதிகளவு ஆக்ஸிஜனை இரத்தம் சுமந்து செல்ல உதவும். மேலும் இது குளுததையோனை உற்பத்தி செய்து, டாக்ஸின்களை நடுநிலைப்படுத்தி, உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றும்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் யார் தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வருகிறார்களோ, அவர்களுக்கு மற்றவர்களை விட சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை உள்ளது. இதில் மக்னீசியத்தின் அளவும் அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்களின் அளவு குறைந்து, சிறுநீரின் வழியே அவை வெளியேறிவிடும்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் செய்து குடித்தாலோ, இரண்டுமே சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும். ஏனெனில் தர்பூசணியில் சிறுநீரில் உள்ள அமிலத்தின் அளவை சீராக பராமரிக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே தர்பூசணியை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் சிட்ரேட் என்னும் உட்பொருள் உள்ளது. இது சிறுநீரக கற்களைக் கரைத்து, சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Kidney Day - Natural Juices To Flush Out Kidney Stone

Kidney stones or renal calculus is the most common form a of kidney disorder. One out of every thousand persons suffers from kidney stones.
Story first published: Thursday, March 10, 2016, 16:09 [IST]
Desktop Bottom Promotion