ஏன் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது?

By: Hemalatha V
Subscribe to Boldsky

நமது உடலில் ஏதாவது ஒவ்வாமை அல்லது விஷத்தன்மை இருந்தால் உடனே நமது உடல் குடல் மூலமாக வெளியே தள்ள முற்படும். அதனால்தான் வாந்தி, பேதி ஆகியவை உண்டாகிறது.

நாம் சப்பிட்ட உணவு அல்லது மருந்து நல்லதல்ல என உடல் ஒருவகையில் காண்பிக்கும் அறிகுறி என்றாலும் அதற்கு தகுந்த முறையில் சரி செய்து விடலாம். ஆனால் வாந்தி பச்சை நிறத்தில் ஏற்பட்டால் அது சற்றே தீவிரமான பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுவதற்கு கீழே சொல்லப்பட்டவை காரணமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் - 1

உங்கள் கல்லீரலில் தொற்று ஏற்பட்டிருந்தால், வயிறு மற்றும் பைல் சுரக்கும் அமிலங்கள் எல்லாம் கலந்து பச்சை நிறத்தை தோற்றுவிக்கலாம். இதனால் என்ன தொற்று என உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

காரணம் - 2

நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணத்தைற்கு உட்படாத போது, அவை விஷத் தன்மையாக மாறிவிடும். இதனால் அந்த உணவுத் துகள் முழுவதும் வெளியேறும் வரை வாந்தி ஏற்படும். அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் அதிக நீரை குடிப்பதால் முழுவதும் விஷத்தன்மையை வெளியேற்ற உங்கள் குடலுக்கு உதவியாக இருக்கும். மேலும் காலதாமதமில்லாமல் மருத்துவரிடம் செல்வது நல்லது.

காரணம் -3

சில மருந்துக்களின் வீரியம் அல்லது ஒவ்வாமையால் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படும். உதாரணத்திற்கு மார்ஃபைன் போன்ற மூலக் காரணிகள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும்போது பச்சை வாந்தி உண்டாகலாம்.

காரணம் - 4

குடலின் இயக்கம் ஒழுங்காக நடைபெறாத போது அது வயிற்றிற்கு ஆபத்தை விளைவிக்கிறது. அத விளைவாக பச்சை வாந்தி ஏற்படலாம்.

காரணம் - 5

மது சாப்பிட்ட்டு சில வகை உணவுகளை சாப்பிடும்போது அது ஜீரண மண்டலத்தை முழுவதும் பாதிக்கிறது.அவற்றில் உண்டாகும் . அதன் வேலையை கெடுக்கும் விதமாக அமையும்போது இவ்வாறு பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படலாம்.

காரணம் -6

சிலருக்கு சில உணவுகள் உடல் ஒத்துக்கொள்ளாது. குளுடன் பொருள் கொண்ட சப்பாத்தி, பால், கடலை போன்றவை உடலுக்கு ஒத்துக் கொள்ளாத நேரத்தில் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படலாம்.

காரணம் - 7

தூக்கமே இல்லாமல், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் இப்படி நடக்க சாத்தியம் இருக்கிறது. ஆகவே உடனே மருத்துவரை பார்த்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவை உடலில் ஒட்டு மொத்த பாதிப்பையும் உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

what Indicates Green vomiting

What happens if vomit is in green Colour?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter