ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் இருக்க நீங்கள் உண்ண / பருக வேண்டிய உணவுகள்!

Subscribe to Boldsky

கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தமிழகமெங்கும் பல இடங்களில் வரலாறு காணாத அளவு வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணத்தால் நம் உடலில் உண்டாகும் பெரிய மாற்றம் நீர்வறட்சி மற்றும் உடல் சூடு.

உடல் சூட்டைக் குறைக்க இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!

தாறுமாறாக அதிகரிக்கும் உடல் சூட்டினால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படுதல் சிறுநீரகம், கல்லீரல், போன்ற உடல் உறுப்புகளின் செயற்திறனை குறைத்துவிடுகிறது. எனவே, உடலில் நீர்வறட்சி உண்டாகாமலும், உடலை குளுமையாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!

இனி, வெப்பத்தாக்குதல் உண்டாகாமல் இருக்க நீங்கள் உண்ண / பருக வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்பிள்

ஆப்பிளில் இருக்கும் 84% நீர்சத்து வெயில் காலத்தில் வெப்பத்தினால் உண்டாகும் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்வறட்சி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் இருக்கும் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ் உடலில் நீர்வறட்சி ஏற்படாமலும், அதிக வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகாமலும் இருக்க பயனளிக்கிறது.

இளநீர்

உடலில் நீர்வறட்சி உண்டாகாமல் பாதுகாப்பது மட்டுமின்றி, இளநீர் உடற்சக்தியை ஊக்குவிக்கவும் செய்கிறது. இது அதிக வெப்பத்தின் காரணமாக உண்டாகும் உடல்நலப் பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

தர்பூசணி

தர்பூசணியில் இயற்கை நச்சுக்கொல்லி இருக்கிறது. இது உடலில் சேரும் நச்சுக்களை போக்க உதவுகிறது. மேலும், உடல் சூடு அதிகரிக்காமல் இருக்கவும் தர்பூசணி உதவுகிறது.

பச்சடிக்கீரை (Lettuce)

பச்சடிக்கீரையில் 94% நீர்ச்சத்து இருக்கிறது மற்றும் இதில் மட்டுமின்றி உயர்ரக வைட்டமின் எ-வும் இருக்கிறது. இந்த இலை தாவர உணவு கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகாமல் இருக்க உதவுகிறது. மேலும், உடலை குளுமையாக்கவும் செய்கிறது.

முள்ளங்கி

இதில் நீர்ச்சத்து, வைட்டமின் சி, ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிகம். இவை உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதை சாம்பார், பொரியல் என என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம்.

முலாம்பழம்

நீர்சத்து அதிகமுள்ள பழங்களில் முலாம்பழம் முதன்மையில் இருக்கிறது. மேலும், இது வெகுவாக உடல் சூட்டை தணிக்கும் பழமும் கூட.

எலுமிச்சை

இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் நீர்ச்சத்து உடல் சூட்டை தணிக்கவும், உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோர்

செரிமானம் சீராக நடக்க, உடலை குளுமையாக்க கோடையில் பகல் வேளையில் மோர் பருகுங்கள். இது உடற்சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் பொட்டாசியம் இருக்கின்றன. இவை உடலில் நீர்வறட்சியை போக்கி ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகாமல் தடுக்க உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Things To Eat, Drink To Avoid Heat Strokes

Here is the list of 10 healthy foods that you should use to avoid heat stroke. Read on to know more..,
Story first published: Wednesday, April 20, 2016, 13:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter