For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!

|

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இந்த தைராய்டு சுரப்பியில் இருவேறு வகையான பிரச்சனைகள் எழும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு.

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹைர்மோன் குறைவான அளவில் சுரக்கும் நிலையாகும். ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பதாகும். பொதுவாக தைராய்டு பிரச்சனை ஒருவருக்கு வந்தால், அதனை முழுமையாக குணப்படுத்த முடியாது.

These 5 Foods Could Be Destroying Your Thyroid

ஆனால் அதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் செய்ய வேண்டியது உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்துவது. இங்கு தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உண்பதைத் தவிர்த்தால், தைராய்டு பிரச்சனை மோசமாவதைத் தடுக்கலாம்.

க்ளுட்டன் உணவுகளைத் தவிர்க்கவும்

ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருக்கும். ஒருவேளை க்ளுட்டன் உணவுகளை இப்பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே ஹைப்போ தைராய்டு இருந்தால், க்ளுட்டன் உணவுகளை முழுமையாகத் தவிர்த்திடுங்கள்.

சோயா பொருட்கள் வேண்டாம்

சோயா பொருட்கள் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டி, உடலை உறிஞ்சச் செய்யும். எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், இந்த உணவுப் பொருட்களை அறவேத் தொடக்கூடாது. ஆனால் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், சோயா பொருட்களை உண்ணலாம்.

காபிக்கு 'பை-பை' சொல்லுங்கள்

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், காபியை அதிகம் குடிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான அளவில் காப்ஃபைன் உடலில் சென்றால், அதனால் அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்பட்டு, சோர்வு மற்றும் தைராய்டு பிரச்சனையை மேலும் மோசமாக்கும். எனவே காபிக்கு பதிலாக வேறு ஏதேனும் ஆரோக்கியமான பானத்தைப் பருகுங்கள்.

வறுத்த உணவுகளைத் தொடாதீர்கள்

வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் என்ன தான் தைராய்டு பிரச்சனைக்கு மருந்துகளை எடுத்து வந்தாலும், இந்த மாதிரியான உணவுகளை உட்கொண்டால், அந்த மருந்தின் சக்தி குறைந்து, நிலைமை மோசமாகத் தான் செய்யும். எனவே தைராய்டு பிரச்சனை இருப்பின், முதலில் எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளைத் தொடாதீர்கள்.

சர்க்கரை

ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு, ஏற்கனவே மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் விரைவில் உடல் பருமனடைவார்கள். அதோடு சர்க்கரையை உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமன் இன்னும் அதிகரிக்கும். எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளையோ அல்லது பானங்களையோ பருகுவதை தவிர்க்க வேண்டும்.

English summary

These 5 Foods Could Be Destroying Your Thyroid

Here are the foods that should have no place in your life if you have a thyroid disorder...
Story first published: Friday, June 17, 2016, 10:35 [IST]
Desktop Bottom Promotion