மோசமான வாய் துர்நாற்றம் எதன் அறிகுறியாக இருக்கலாம்?

வாய் துர் நாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சரியாக பள் விளக்குதல் ஈறு பிரச்சனைகள் தவிர்த்து, உடலின் உள்ளுறுப்புகளில் உண்டான பாதிப்புகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

Subscribe to Boldsky

உடல் உறுப்புகளில் மிக முக்கியமனது கல்லீரல். இது ஓயாமல் வேலை செய்து கொண்டேயிருக்கும்.

ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மட்டும் அவை செய்யவில்லை. ரத்தத்தை சுத்தம் செய்வது, சத்துக்களை உடல் முழுவதும் அனுப்புவது, நச்சுக்களையும் கழிவுகளையும் அப்புறப்படுத்துவது.

உடல் முழுவதும் அன்றாடம் உற்பத்தியாகும் அமோனியா போன்ற செல்களை பாதிக்கும் நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அனுப்பி வெளியேற்றுவது என பல வேலைகளை செய்கிறது.

Symptoms of Liver's  dysfunctions


இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் பலவித அறிகுறிகளை காண்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கல்லீரல் பாதிப்பிற்கு காரணம் என்ன?

ஓயாமல் அதற்கு வேலை தரும்படியான கொழுப்பு மசலா உணவுகளை சாப்பிடுவது, நச்சுக்கள் அதிகம் இருக்கும் கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,மது குடிப்பது, என பலவித காரணங்கள் உள்ளன.

கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

 

வாய் துர்நாற்றம் :

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

அந்த அமோனியாவை கல்லீரலால் சிறு நீரகத்திற்கு அனுப்ப முடியாமல் போகும்போது அது உடலிலேயே தங்கிவிடும். இதனால் வாய் துர் நாற்றம் மிக அதிகமாக இருக்கும்.

 

மிகவும் சோர்வான கண்கள் :

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால் சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

அஜீரண கோளாறு :

கல்லீரல் செயல்படாத போது கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உட்படாது இதனால் ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்ந்திருக்கும். .

சரும அலர்ஜி :

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத்தில் திட்டுதிட்டாக வெள்ளையாக காணப்படும்

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:

கல்லீரல் பாதிக்கபடும்போது உணவை ஜீரனிக்க பயன்படும் அடர் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த திரவமான பைல் சுரப்பதில் பிரச்சனை உண்டாகி, அவை சிறு நீரகத்தில் அடர் நிறத்தை தந்துவிடும்.

கருமையாக அல்லது மிக அடர் பழுப்பு நிறத்தில் கழிவுகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Symptoms of Liver's dysfunctions

If Liver is not functioning properly it reacts immediately and shows some of signs and symptoms.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter