For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!

|

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு தமனிகள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை தான் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்கள். இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இரத்தம் செல்வதில் இடையூறை ஏற்படுத்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

கொழுப்புக்கள் மட்டுமின்றி, கால்சியம், செல்லுலார் கழிவுகள், ஃபைப்ரின் போன்றவைகளும் படிந்து, இரத்த ஓட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். இப்படி தமனிகளில் படியும் கழிவுகளை வெளியேற்ற, சிறந்த வழி உணவுகளை உண்பது தான். இங்கு தமனிகளை சுத்தம் செய்ய உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், தமனிகளைச் சுத்தப்படுத்தி, இதய நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

சமைக்கும் போது உணவுகளில் பூண்டு சேர்ப்பதற்கு ஓர் காரணமாக உடல் மற்றும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் மற்றும் இதர கழிவுகள் படிவதைத் தவிர்க்க என்றும் கூறலாம். மேலும் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, பூண்டை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் தமனிகளில் கழிவுகள் படிந்து தடிமனாவது தடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.

மாதுளை

மாதுளை

2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியில் மாதுளை தமனிகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுவது தெரிய வந்தது. இதற்கு காரணம் மாதுளையில் பாலிஃபீனால்கள், வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது தான். இவை தான் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்டி, கழிவுகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி, தமனிகளை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

சால்மன்

சால்மன்

சால்மன் மீன் உடலினுள் கழிவுகள் மற்றும் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கும். மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், EPA மற்றும் DHA போன்றவை உள்ளது. இவை உடலினுள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, அபாயகரமான ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, இரத்த நாளங்களில் அழற்சி அல்லது காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் ஏராளமாக நிறைந்துள்ளது. இது பல்வேறு நன்மைகளை விளைவிக்கும் ஓர் பொருள். அதில் உடலினுள் அழற்சி மற்றும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்படைவதைத் தடுப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் இதயத்திற்கு நல்லது என்று எப்படி சொல்கிறார்கள் தெரியுமா? அதில் உள்ள முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பாலிஃபீனால்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். முக்கியமாக இது தமனிகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Superfoods That Can Cleanse Your Arteries

Here are some superfoods that can cleanse your arteries. Read on to know more...
Desktop Bottom Promotion