For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்று நோய்களைத் தடுக்கும் முக்கிய சூப்பர் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

By Hemalatha
|

நமக்கு எந்த நோயுமே வரக் கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் ஆரோக்கியமான உணவு மட்டுமே சாப்பிடுகிறோமா என்றால்.. கேள்விக் குறிதான்? கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசை.

நம் உடலில் மரபணுவின் ஒழுங்கான இயல்பான செயல் முறைகளை திடீரென மாற்றப்படுவதால் வருவதுதான் கேன்சர்.

புற்று நோய் வருவதற்கு நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உணவுகளில் கலக்கப்படும் ரசாயனம் கொண்ட ப்ரெசர்வேட்டிவ், ருசியை தூண்டுவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள், மாசு நிறைந்த சுற்றுப் புற சூழல், சிகரெட், சக்தி வாய்ந்த புற ஊதாக் கதிர்கள் மரபணு, என சொல்லிக் கொண்டே போகலாம்.

Super foods that fighting against to cancer

ஃப்ரீ ரேடிகல்ஸ்- வில்லன்

நமது உடலில் ஃப்ரீ ரேடிகல்ஸ் என்பவை உருவாகிக் கொண்டேயிருக்கும். அவை எப்படி உருவாகிறது என்றால், உடலில் அன்றாடம் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தாலும், மாசுக் காற்று, கதிர்கள் ஆகியவற்றாலும், உருவாகிய, தனித்துவிடப்பட்ட மூலக்கூறுகள் எல்லாம் கலந்து ஒரு சங்கிலி போல் தீய சக்தியாக உருவெடுத்து, நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழிக்கும். இதனால் வருவதுதான் புற்றுநோய்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் -ஹீரோ

அப்படிப்பட்ட தீய ஃப்ரீரேடிகல்ஸை அழிப்பதுதான், ஹீரோவான ஆன்டி-ஆக்ஸிடென்ட் வேலை. எப்போதெல்லாம் ஃப்ரீரேடிகல்ஸ் உருவாகிறதோ, அப்போதெல்லாம் உடலில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதனை அழித்துவிடும்.

ஆகவே ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் உங்கள் செல்கள் பாதிப்படையாமல் , ஆரோக்கியமாக இருக்கும். விட்டமின் ஏ, செலினியம், விட்டமின் ஈ, சி ஆகியவை ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஊட்டச் சத்துக்கள்.

இப்போது எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் புற்று நோய் வராமல் தடுக்கலாம் என பார்க்கலாம்

புரோக்கோலி :

புரோக்கோலியில் உள்ள சல்ஃபராஃபேன், கெமிக்கலால் உருவாகும் புற்று நோய்களை தடுக்கும் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை நிச்சயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

க்ரீன் டீ :

கடந்த 10 வருடங்களாக க்ரீன் டீ பிரபலமடைந்து வருவதில் சற்றும் மிகையே இல்லை. காரணம் அவ்வளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது நேரம் கிடைக்கும்போதெல்லாம் அருந்துங்கள். இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

தக்காளி :

தக்காளியில் லைகோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. அது நோய் எதிர்ப்பு செல்களின் செயல்களை தூண்டும். மேலும் தக்காளியில் விட்டமின்ஏ, சி, ஈ ஆகியவை உள்ளன. தினமும் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

புளூ பெர்ரி பழங்கள் :

ப்ளூ பெர்ரி பழங்களில் புற்று நோயை எதிர்க்கும் தாவர ஊட்டச் சத்து இருக்கின்றன. ஃப்ரீ ரேடிகல்ஸினால், பாதிப்படைந்த செல்களை சரி செய்கின்றன.

இஞ்சி :

இஞ்சி நிறைய புற்று நோய்களை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. கருப்பையில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிப்பதாக ஆய்வினில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ப்ரோஸ்டேட் , மார்பகம், நுரையீரல், கணையம், உணவுக் குடல் ஆகிய பகுதிகளில் வரும் புற்று நோயை தடுக்கிறது.

மாதுளம் பழம் :

இதுவும் கேன்சரை தடுக்கும் சூப்பர் பழம். இதில் ஃப்ளேவினாய்ட் , ஃபீனோல், டேனின், ஆகியயவை நமது செல் அமைப்பின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி புரிகிறது.

மார்பகம், குடல், ப்ரோஸ்டேட் ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

வால் நட் :

வால் நட்டிலுள்ள ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் செல்களை உருவாகாமல் காக்கிறது. அதேபோல் ஃப்ரீ ரேடிகல்ஸினையும் அழிக்கின்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பருப்பு வகையாகும்.

திராட்சை :

பச்சை மற்றும் கருப்பு திராட்சை இரண்டிலுமே நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது செல்களை பாதிப்படையாமல் அவைகளின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கின்றது.

தினமும் திராட்சை சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இளமையை தக்க வைக்கவும் திராட்சை உதவுகிறது.

English summary

Super foods that fighting against to cancer

Super foods that fighting against to cancer
Desktop Bottom Promotion