For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த ஆறு உணவுகள்!

இங்கு குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த ஆறு உணவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

உடல் பருமன் காரணத்தால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் உடல் உறுப்புகளும் சோம்பேறியாக மாறும். இதனால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்து இல்லற ஆரோக்கியம் வரை பாதிக்கும். உடல் எடை குறைக்க சரியான டயட், முறையான பயிற்சி அவசியம்.

அந்த வகையில் குளிர் காலத்தில் உடல் எடை குறைக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொய்யா!

கொய்யா!

கொய்யா கனியில் மிகுதியான அளவில் நார்ச்சத்து மற்றும் ஆரஞ்சில் இருப்பதை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக வைட்டமின் சியும் இருக்கிறது. மேலும், கொய்யா மூலமாக பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற மினரல் சத்துக்களும் அதிகமாக உடலுக்கு கிடைக்கிறது.

கொய்யாவில் இருக்கும் சிறப்பே இதில் கலோரிகள் குறைவு. இதை நீங்கள் ஸ்நாக் உணவுகாக உட்கொள்ளலாம்.

சிவப்பு கேரட்!

சிவப்பு கேரட்!

கேரட்டில் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடென்ட், பீட்டா கரோட்டின் இருக்கின்றன. பீட்டா கரோட்டின் உடலில் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாத்து உதவுகிறது. கேரட்டில் இருக்கும் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஃபோலேட் மற்றும் மாங்கனீசு போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றன.

இதை நீங்கள் பச்சையாகவும், வேக வைத்தும், உணவுக்கு சைட் டிஷாக சமைத்தும் கூட சாப்பிடலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும்.

கடுகு இலைகள்!

கடுகு இலைகள்!

பஞ்சாப் பாரம்பரிய உணவான இதில் வைட்டமின் கே, ஈ, கால்சியம், காப்பர், மாங்கனீசு போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. நூறு கிராம் கடுகு இலைகளில் வெறும் 25 கலோரிகள் தான் இருக்கும்.

ஓட்ஸ்!

ஓட்ஸ்!

ஓட்ஸ் உணவு குளிர் காலத்தில் உடல் எடை குறைக்க ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. பால் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து காலை உணவாக இதை உட்கொள்ளும் போது நாள் முழுதும் உங்களுக்கு அதிகமாக பசிக்காது. இதனால் உடல் எடையை குறைக்க உதவும்.

ரெட் ஒயின்!

ரெட் ஒயின்!

குளிர் காலத்த்தில் மாலை ஒரு கிளாஸ் ரெட் ஒயின் குடிக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு நாளுக்கு 120 மி.லி ஒயின் வரை எடுத்துக் கொள்ளலாம்.

பேரிச்சம்பழம்!

பேரிச்சம்பழம்!

உடல் எடை குறைக்க பேரிச்சம்பழம் ஒரு சிறந்த உணவு. இதில் அதிகளவில் நார்ச்சத்து இருக்கிறது. ஒரு நாளுக்கு 2 - 3 பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்ளலாம். இது நாள் முழுக்க உடலுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கும். பசியை குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Winter Foods for Weight Loss

Six Winter Foods for Weight Loss
Story first published: Monday, December 19, 2016, 10:27 [IST]
Desktop Bottom Promotion