உங்கள் நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும் முக்கிய 5 காரணங்கள் !!

Written By:
Subscribe to Boldsky

நெஞ்செரிச்சல் எப்பவாவது ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இருந்தால் அதற்கு சிகிச்சை அவசியம். தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

வயிற்றுப் பகுதிகளில் ஜீரணிக்க உதவும் நொதிகள், அங்கு உண்டாகும் அழுத்தத்தால் உணவுகுழாயின் மேலே வரை செல்லும். இதனால் அமிலத்தன்மை தொண்டை வரை பரவி எரிய ஆரம்பிக்கும். இதுதான் நெஞ்செரிச்சல்.

reasons for heartburn

நெஞ்செரிச்சல் வருவதற்கு உண்ணும் உணவுகள், மன அழுத்தம், உறுப்புகள் பாதிப்பு என பல காரணங்கள் இருக்கிறது. இது ஒரு நோயல்ல. அறிகுறி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களுடைய காலை காபி :

உங்களுடைய காலை காபி :

பொதுவாக தூங்கி எழுந்ததும் என்சைம்கள் சுரக்க ஆரம்பிக்கும். காரணம் அப்போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகம் தூண்டப்படுவதால் ஜீரண மண்டலம் வேலை செய்ய தொடங்கும்.

அந்த சமயத்தில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது அதிக என்சை சுரப்பதால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகவே நீர் குடித்துவிட்டு அரை மணி நேரத்திற்கு பின் காபி குடிக்கவேண்டும்.

 இரவுகளில் இதை குடிப்பதால் :

இரவுகளில் இதை குடிப்பதால் :

இரவில் மது அதிகமாக குடிக்கும்போது அது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும். எச்சில் , குடலில் படிந்திருக்கும் அதிகப்படியான அமிலத்தை அப்புறப்படுத்தும்.

மது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும்போது அமிலம் அதிகமாகி நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

 புதினா கம் மெல்லுவீர்களா?

புதினா கம் மெல்லுவீர்களா?

புதினாவினால் செய்த பொருட்களுமே உங்கள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தாது. மாறாக அதிகப்படுத்தும்.

புதினா சூயிங்கம் பற்களுக்கு பாதுகாப்பானதென்றாலும் அது வயிற்றிலுள்ள தசைகளை தளரச் செய்வதால் அதிக என்சைம்களை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்

தாமத இரவு உணவு :

தாமத இரவு உணவு :

இரவுகளில் தாமதமாக உண்டால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். தூங்கப்போவதற்கு 2 மணி நேரம் முன்பாக இரவு உணவை கட்டாயம் முடித்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் உணவுகள் :

சாப்பிடும் உணவுகள் :

இரவு என்ன உணவுகள் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். உருளைக் கிழங்கு, போன்ர வாயு தரக் கூடிய உணவு, மசாலா உணவுகள் அதிக காற்றை உடலில் உற்பத்தி செய்கின்றன.

இவை என்சைம் சுரப்பை அதிகப்படுத்தும். விளைவு நெஞ்செரிச்சல் அதிகமாகும். பொதுவாகவே மசாலா, வாய்வு தரக் கூடிய உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

reasons for heartburn

These things that are making your heartburn worse eve
Please Wait while comments are loading...
Subscribe Newsletter