For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டாக இருப்பவர்கள் ஏன் ஆரஞ்சு சாப்பிட வேண்டும் என தெரியுமா?

|

ஆரஞ்சின் நிறம் அனைவரையும் கவரக் கூடியது. புளிப்பும் இனிப்பும் சேர்ந்த அந்த சுவை வெயிலில் காலத்தில் இதம் அளிக்கும். சுவையும் அதிகம். அத்தகைய ஆரஞ்சின் சத்துக்கள் ஒப்பில்லாதது.

கொழுப்பு கிடையவே கிடையாது. அதிக நார்சத்துக்களை கொண்டது. விட்டமின் சி,ஏ நிறைந்தவை. இதில் 170 ஃபைடோகெமிக்கல் உள்ளன. இவற்றுள் 60 ஃபைடோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட். அதோடு இதயத்தை சீராக வைக்க உதவும் முக்கிய மினரலான பொட்டாசியம் அதிகம் கொண்டுள்ளது. அதிக நீர்சத்து நிறைந்தவை.

Obese people Should Eat Orange ! Why?

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடல் பருமனானவர்கள் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை அதிகம் எடுத்துக் கொண்டால், உடல் பருமனால் உண்டாகும் இதய நோய்கள், சர்க்கரை வியாதி தடுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு செல்கள் அதிகம் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவுக்கும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்கும். அவை சாதரண நல்ல செல்களை செதாரப்படுத்துகிறது.

இதனால் செல் இறப்பு அதிகமாகி, அவை புற்று நோய் மற்றும் மரபியல் தொடர்பான வியாதிகளை உருவாக்கும். அதோடு உடலுக்கு பாதகமான பல வியாதிகளை உருவாக்குகிறது.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் அதிக ஃப்ளேவினாய்டு உள்ளது. குறிப்பாக ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் போன்ற முக்கிய ஃப்ளேவினாய்டுகள் உள்ளது.

அதனால் 50 சோதனை எலிகளுக்கு இந்த ஃப்ளேவினாய்ட்கள் கொழுப்பு உணவுகளுடன் கொடுக்கப்பட்டது. ஒரு பிரிவு எலிககளுக்கு வெறும் கொழுப்பு நிறைந்த உணவுக்ள் மட்டுமே அளிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவு எலிகளுக்கு கொழுப்பு உணவுகளுடன் தலா ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் ஆகிய ஃபேளேவினாய்டு அளிக்கப்பட்டது.

இதில் கொழுப்பு நிறைந்த உணவுகள் மட்டும் அளிக்கப்பட்ட எலிகளுக்கு சம நிலையற்ற ஆக்ஸிஜன் அதிகமாக உருவாகி, செல் சிதைவும் அதிகமாக இருந்திருக்கிறது.

ஆனால் கொழுப்பு உணவுடன் மேற்கூறிய ஃப்ளெவினாய்டு தரப்பட்ட எலிகளுக்கு கெடுதால் தரும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உருவாகவில்லை. செல்சிதைவும் ஏற்படவில்லை.

எனவே மருத்துவர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆரஞ்சு எலுமிச்சை ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் நோய், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கலாம் என கூறுகின்றனர். அதோடு நுரையீரல் மற்றும் வாய்ப் புற்று நோயும் இது தடுக்கும் என ஆய்வு கூறுகின்றது.

English summary

Obese people Should Eat Orange ! Why?

Obese people Should Eat Orange ! Why?
Story first published: Tuesday, August 23, 2016, 17:05 [IST]
Desktop Bottom Promotion