For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"மாடல் டயட் " அப்படின்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?

|

டயட் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் சிலருக்கு உடல் எடை கணிசமாக குறைவது இல்லை. ஏறுவது இறங்குவது என ஒரு நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டேயிருக்கும். நாம் டயட்டை கவனித்தாலும் சரியான அளவுகளில் எல்லா சத்துக்களை எடுக்கிறோமோ என பலருக்கு குழப்பங்கள் நேருவதுண்டு.

Nutrition model to fight against obesity

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உடல் பருமனானவர்களுக்கென ஒரு மாடல் டயட்டை கொண்டு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு நியூட்ரிஷனல் ஜியாமெட்ரி என பேரை தந்திருக்கிறார்கள்.

இது ஊட்டசத்து நிபுணர்களுக்கு, மருத்துவர்களுக்கும் எவ்வாறு தங்கள் நோயாளிகளுக்கு டயட்டை வழங்கலாம் என உதவி புரியும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மாடல் டயட்டில் புரோட்டின் உணவுகளே அதிகம் இடம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள நம் மூளை தூண்டப்படும் வகையில் இந்த டயட் உள்ளது.

சாதரணமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எவ்வாறு உடல் பருமனையும், அதனால் நோய்களையும் தருகிறது என்கின்ற வகையில் இந்த ஆராய்ச்சியை சிட்னிஸ் சார்லஸ் பெர்கின்ஸ் பல்கலைக் கழக்த்தின் பேராசிரியர்கள் டேவிட் மற்றும் ஸ்டீஃபன் ஆகியோர் மேற்கொண்டனர்.

இந்த நியூட்ரிஷனல் ஜியாமெட்ரி எவ்வாறு உடலில் செயல்களை தூண்டுகிறது, இதன் மூலம் நோய்களை எப்படி கட்டுப்படுத்தலாம், உடல் எடையை எப்படி குறைய வைக்கலாம் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டது.

ஒரே ஒரு சத்து மட்டும் நாள்பட்ட நோய்களை குணமாக்காது. சமசீரான சத்துக்கள் நோய்களின் வீரியத்தை கட்டுப்படுத்தி, கட்டுக்குள் வைக்கிறது.

நவீன உணவுகளை பழக்கப்படுத்தி, புதிய நோய்களை உருவாக்கிவிடுகிறோம். இதற்கு பழைய டயட் முறை சரிவராது .

ஏனெனில் சாப்பிடும் உணவுவகைகளில் கலக்கப்படும் செயற்கை மசாலா வகைகள் புதிய நோய்களை உண்டுபண்ணுகின்றன. சாதாரண உணவுகளில் கிடைக்கும் கொழுப்பு, கார்போஹைட்ரேட், இந்த கால உணவுகளில் முழுவதும் மாற்றப்பட்டு, நமது உடலில் கரைய முடியாத அளவிற்கு தங்கி, உடல் பருமனை உண்டு பண்ணுகின்றன.

ஆகவே இந்த பிரச்சனைகளுக்கு தகுந்தாற்போல் இந்த நியூட்ரிஷனல் ஜியாமெட்ரி வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்விற்காக சுமார் 116 வகை டயட்டுகள் பின்பற்றப்பட்டு அவை எவ்வாறு உடலில் மாற்றங்களை உண்டுபண்ணுங்கின்றன. நோய்களுக்கு எவ்வாறு குணம் தருகின்றன என ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் ஜர்னல் ஆன்யுவல்ரிவ்யூ நியூட்ரிஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Nutrition model to fight against obesity

Nutrition model to fight against obesity
Desktop Bottom Promotion