For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இரத்தம் எவ்வாளவு அசுத்தமா இருக்குன்னு தெரியுமா? அத சுத்தம் செய்ய வேண்டாமா?

|

உடலில் சருமத்தில் மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும்படி அழுக்கு சேருகிறது. ஆனால், நமது உணவு பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றால் நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளிலும் கூட நிறைய அழுக்கு சேருகிறது. அவற்றை நாம் கண்களால் பார்க்க முடியாது, ஏதேனும் உடல்நலக் குறைபாடு அல்லது அறிகுறிகளை வைத்து தான் கண்டறிய முடியும்.

நமது உடலிலேயே மிகவும் முக்கியமானது இரத்தம். இது சீர்கெட்டு போனால், உடல் பாகம் அனைத்தும் சீர்கெட ஆரம்பத்துவிடும். எனவே, அப்படிப்பட்ட இரத்தத்தில் சேரும் அழுக்குகளை போக்க, சுத்திகரிப்பு செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்பருத்தி இதழ்கள்

செம்பருத்தி இதழ்கள்

செம்பருத்திப்பூவின் இதழ்களை காய வைத்து பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

ஆப்பிள், கேரட் சாறு

ஆப்பிள், கேரட் சாறு

1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

திராட்சை

திராட்சை

திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.

நன்னாரி வேர்

நன்னாரி வேர்

நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

விளாம்பழம்

விளாம்பழம்

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.

இஞ்சி, எலுமிச்சை சாறு

இஞ்சி, எலுமிச்சை சாறு

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவற்றைக் கலந்து அருந்தி வர‌ இரத்தம் தூய்மை அடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Purify Our Blood

Do you know about the natural ways to purify our blood? read here in tamil.
Desktop Bottom Promotion