பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகளை தருகிறது! நம்புவீர்களா?

By: Hemalatha V
Subscribe to Boldsky

சோயா மில்க், சோயா ட்ரிங்க் என பலபேரும் இது ரொம்ப ஆரோக்கியம் என வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உண்மையில் அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நல்லது தருபவை எனதான் எல்லாரும் சோயா வை பலவகையில் உபயோகிக்கிறோம்.

ஆனால் இந்த சோயாவினாலும் பல ஆபத்தான நோய்கள் தாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

சோயா பாலில் அப்படி என்னதான் இருக்கிறது?

சோயா மில்கில், சோயாவிலிருந்து பிரிக்கப்பட்ட பால், கரும்பு சாறு, கடல் உப்பு, இயற்கை வாசனைப் பொருட்கள், விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12.

எல்லாமே நல்ல பொருட்கள்தானே உள்ளது. பின்ன ஏன் வேண்டாம் என சொல்கிறார்கள் எனத் தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் -1 :

இதில் அதிக அளவு எதிர் சத்துக்கள் உள்ளன. தினமும் 2 தடவை குடித்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை மாற்றிவிடும்.

காரணம் -2 :

உணவுபொருள்களிலே அதிகம் மரபணு மாற்றப்படுவது சோயாவில்தான். 99 % மரபணு மாற்றப்பட்ட சோயாவே கிடைக்கின்றன. இவை புற்று நோய் தொடங்கி பல கடும் விளைவுகளை உடலில் உண்டாக்கும்.

காரணம் -3 :

நமது உடலின் விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 தேவையை அதிகப்படுத்திவிடும்.

காரணம் -3 :

சோயாவிலுள்ள ஹீம் அக்ளூடினின் (ரத்த செல்களுடன் வினைபுரிபவை ) ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் கட்டியாக்கிவிடும்.

காரணம் -5 :

சோயாவில் அதிக அளவு நச்சு வாய்ந்த அலுமினியம் இருப்பதால் இது நரம்பு மண்டல்த்தை தாக்கும். சிறு நீரகத்தையும் பாதிக்கும்.

காரணம் -6 :

சோயாவில் அதிகளவு ஃபைடிக் அமிலம் இருப்பதால் அது, கால்சியம், மெக்னீசியம் போன்ற அவசிய மினரல்களின் சத்துக்களை உட்கிரகிக்க விடாமல் தடை செய்கிறது.

காரணம் 7 :

மிக மிக அதிக வெப்ப நிலையில்தான் சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது. இது மனித ஜீரண மண்டலத்திற்கு பெரும் பிரச்சனைகளைத் தரும்.

காரணம் 8 :

சோயாவில் சுரக்கும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் எனப்படும். இது பெண்களின் எண்டோகிரைன் செயல்பாடுகளை மாற்றி, குழந்தையின்மை, மார்பக புற்று நோயை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Impacts of soy milk

Consuming Soy milk may cause for many genetic disorders
Please Wait while comments are loading...
Subscribe Newsletter