For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் குறைவான நேரத்தில் அதிக சத்துக்கள் கொண்ட சிற்றுண்டிகள் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?

இந்த அவசர யுகத்தில் காலையில் மிக குறைவான் நேரத்தில் அதே சமயம் நாள் முழுவதும் உழைக்க தகுந்த சத்துக்கள் உள்ள உணவுகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றியான கட்டுரைதான் இது.

|

நீங்கள் காலையில் உண்ணும் உணவு மிக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் வேலை, முக்கியம் என மனதை சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

காலையில் சாப்பிட இட்லிதான் சரியான சிறந்த உணவு என உலகம் முழுவதும் உள்ள உணவு அமைப்புகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை பொறுமையாக சாப்பிட நேரமில்லாதவர்களுக்குதான் இந்த கட்டுரை.

How to select healthy food for breakfast

அவசரத்தில் அரைகுறையாக சாப்பிடுவதற்கு பதிலாக முழு சத்துக்களும் தரும் வகையிலான மாற்று உணவுகளையாவது சாப்பிடுவது நல்லது. அவ்வாறான உணவுகள் வல்லு நர்கள் சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ் :

ஓட்ஸ் :

காலையில் உங்களுக்கு நார்சத்து மற்றும் புரொட்டின் உணவுகள்தான் தேவை. ஆகவே இவை அனைத்தும் அடங்கிய ஓட்ஸ் சாப்பிடலாம்.

இதனை பாலில் 5 -7 நிமிடம் வேக வைத்து பின் திராட்சை, முந்திரி தூவி சாப்பிடும்போது தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்தும் சேர்த்து கிடைக்கும். செய்யும், சாப்பிடும் நேரம் குறைவு.

கலோரி- 350, நார்சத்து- 8 கி, புரோட்டின் - 15 கி கிடைக்கும்

 க்ரீக் யோகார்ட் :

க்ரீக் யோகார்ட் :

க்ரீக் யோகார்ட் எல்லா க்டைகளிலும் கிடைக்கும். அதில் பழங்களை துண்டாக்கி கலந்து சாப்பிட்டால் காலைக்கு தேவையான சத்துக்களை பெறலாம்.

கலோரி - 390 கி, கொழுப்பு - 5கி, புரதம் - 31, சர்க்கரை - 42 கி

முட்டை :

முட்டை :

அவித்த முட்டை அல்லது ஆம்லெட் போன்றவற்றை சாப்பிடலாம். செய்யும் நேரமும் 5 நிமிடம்தான்.

முட்டையிலுள்ள லியூசின் மற்றும் ஜியாஸான்தைன் ஆகிய அமினோ அமிலங்கள் கண் பார்வை அதிகரிக்கச் செய்யும் கேடராக்டை தடுக்கும். வயிறு நிறையும்.

 பெர்ரி வகைகள் :

பெர்ரி வகைகள் :

கடைகளில் பெர்ரி வகை பழங்களை வாங்கி முன்னமே வைத்துக் கொள்ளுங்கள். இவை அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.

அதிக நார்சத்தும் உள்ளது. பெர்ரி பழங்களை யோகார்டுடன் சாப்பிட்டால் வயிறு நிறையும் . நேரமும் குறைவு. காலைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

 ஆளி விதைகள் :

ஆளி விதைகள் :

இவை அதிக புரதம் கொண்டவை. நிறைய ஊட்டச் சத்து கொண்டவை. ஆளி விதைகளை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை கஞ்சி போல் காட்சி குடிக்கலாம். அல்லது யோகார்ட் அல்லது ஜூஸ் போல் செய்து சாப்பிட்டால் முழு சத்துக்களும் கிடைக்கும்.

முழுதானிய பிரட் வகைகள் :

முழுதானிய பிரட் வகைகள் :

வெள்ளை பிரட் வாங்கக் கூடாது. ஆனால் முழுதானியம் மற்றும் கோதுமை வகை பிரட்டுகள் வாங்கலாம். இவற்றில் அதிக நார்சத்து மற்றும் புரொட்டின் உள்ளது. இட்லிக்கு அடுத்ததாக பிரட் மற்றும் ஒரு முட்டை முழுமையான காலை சிற்றுண்டியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to select healthy food for breakfast

Breakfast is the most important of the day. but due to morning rush, dont have time time to whip up. so less time consumption breakfast foods are here to know for you
Story first published: Monday, October 24, 2016, 15:09 [IST]
Desktop Bottom Promotion