சப்போட்டா பழத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?

சப்போட்டா பழம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான பழம். இப்போது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது. சப்போட்டா விளைச்சலில் இந்தியாவிலேயே கர் நாடகா முதலிடம் உள்ளது.

Subscribe to Boldsky

பழங்கள் ஒவ்வொன்றுமே அற்புத குணங்களை பெற்றவை . பொதுவாகவே பழங்களில் அதிக நார்சத்தும் ஆன்டி ஆக்ஸெடென்டும் உள்ளது.

இவை இரண்டுமே போஷாக்கிற்கும் புத்துணர்ச்சிக்கும் இளமையாக இருக்கவும் உதவுபவை. அவற்றில் சப்போட்டா விசேஷமிக்கது.

health benefits of sapota

சப்போட்டா மிகவும் இனிப்புச் சுவை கொண்டது. அதில் இருக்கு சத்துக்களும் நன்மைகளும் வியப்பை அளிப்பவை. சப்போட்டாவை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்வது இன்னும் சுவையை அதிகரிக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கண் பார்வை :

கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும். கண் குறைப்பாட்டை தடுக்கும். இதில் அதிக விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது.

கர்ப்பகாலத்தில் உதவும் :

கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தி தலை சுற்றல் சோர்வு, தளர்ச்சி ஆகிய்வற்றை போக்கும். உடலுக்கு தேவையான சக்தியையும் , தேவையான சத்துக்களையும் தாய்க்கும் சிசுவிற்கும் அளிக்கிறது.

மலச்சிக்கல் :

குடல்களில் நெகிழ்வுத்தன்மையை தரும். மல்ச்சிக்கலை குண்ப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிப்படுத்தும்.

சக்தியை தரும் :

அன்றைய நாள் முழுவதும் சோம்பல் இல்லாமல் முழு எனர்ஜியுடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டு பாருங்கள்.

சிறு நீரக கற்களை கரைக்க :

சப்போட்டாவின் விதைகள் சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைக்கிறது.

எலும்பை பலப்படுத்தும் :

சப்போட்டாவில் அனைத்து மினரல்களும் உள்ளன. கால்சியம் பாஸ்பரஸ், ஜிங்க், செலினியம், காப்பர் ஆகிய சத்துக்கள் உங்கள் எலும்பிற்கு பலத்தை சேர்க்கும். அதோடு வயதான பின் வரும் எலும்பு பாதிப்புகளை சரிப்படுத்தும்.

ரத்த சோகை :

ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

புற்று நோயை தடுக்கும் :

வாய்புற்று நோய் மற்றும் குடல் புற்று நோய் வராமல் தடுக்கும் குணங்கள் சப்போட்டாவில் உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸென்டென்ட் புற்று நோய் வராமல் காக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

health benefits of sapota

eating sapota everyday may give you number of benefits to live healthy
Please Wait while comments are loading...
Subscribe Newsletter