தூங்காமல் அவதிப்படுகிறீர்களா? இளைக்க வேண்டுமா? இந்த அதிசய கீரையை சாப்பிடுங்க!!

By: Hemalatha V
Subscribe to Boldsky

செலரி என்ற காய்கறி கொத்துமல்லி தழை போன்று தோற்றத்தில் இருக்கும் கீரை வகையாகும். இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசியாவில் வளர்பவை. தற்போது இந்தியாவிலும் பரவலாக விளையச் செய்கிறோம். இதில் காணப்படும் சத்துக்கள் அளவிட முடியாது. அத்தனை நன்மைகளை இந்த கீரையை எல்லாரும் இப்போது உண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த செலரி யில் செலட் செய்வது பிரசித்து பெற்றது. வேகவைக்காமல் சாப்பிட்டால் அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.

நீங்கள் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளை விட 7 மடங்கு கொலஸ்ட்ராலை குறைக்கக் கூடியது. விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி, பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், சோடியம், அமினோ அமிலங்கள் என ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

அதனை நீங்கள் டயட்டில் எடுத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஓடிப் போகும் என பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ;

இதிலுள்ள பியூட்டைல் தாலைட் என்ற சத்து கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. பைல் அமிலத்தை சுரக்கத் தூண்டுகிறது. இதனால் கொழுப்புகள் வேகமாக ஜீரணிக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் :

நீங்கள் தொடர்ந்து 7 நாட்கள் செலரியை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள தாலைட் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையில்லாமல் டென்ஷன் படுபரகள் சாப்பிட்டால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

தூக்கமின்மையை குணப்படுத்தும் :

இன்சோம்னியா என்ற நீண்ட நாட்களாக தூங்காமல் அவதிப்படுபவர்களுக்கு செலரி ஒரு அரு மருந்து. இது நரம்புகளில் உண்டாகும் இறுக்கத்தை தளர்க்கிறது. மெலடோனின் ஹார்மோனை அதிகப்படுத்தி தூங்க வழிவகுக்கிறது.

உடல் எடையை குறைக்க :

அதிக இனிப்புகளை சாப்பிடும்போல் தூண்டும் மூளையின் உணர்வுகளை கட்டுப்படுத்தி, உடல் இளைக்க உதவுகிறது. இதனை ஜூஸாக செய்து குடித்தால் உங்களுக்கு ஒரு மாதத்தில் நல்ல பலன் அளிக்கும்.

சிறு நீரக மற்றும் பித்தப்பை கற்களை அகற்றும் :

சிறுநீரக்த்தில் மற்றும் பித்தப்பையில் உண்டாகும் கற்களை கரைத்து வெளியேற்றுகிறது. அதோடு, சிறு நீரகத்தில் இவை உண்டாகாமலும் தடுக்கிறது.

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் :

இதிலுள்ள அதிக நார்சத்து உணவுக் குழாய் மற்றும் சிறு குடலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் நோய்க்கு மருந்துகளை நீங்கள் உட்கொண்டால் அதனால் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Health Benefits of Celery

Regular Intake of celery in your Diet may help you out to reduce body weight and it has many health benefits.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter