For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு காளான் பிடிக்குமா? இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

|

காளான் அனைவருக்கும் பிடித்த உணவு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் வாயிலும் எச்சில் ஊற வைக்கும் உணவாக திகழ்கிறது காளான். ஃபாஸ்ட் புட்டாக இருப்பினும் சரி, பிரியாணி, சைடிஷ், குழம்பு என எப்படி சமைத்தாலும் காளானை ஒருப்பிடி பிடிக்க யாரும் தவறுவதில்லை.

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

வெறும் நாவிற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் ருசியை சேர்க்கிறது காளான். ஆனால், ஃபாஸ்ட் புட்டாக மட்டும் இதை தவிர்த்துவிடுவது நல்லது. காளானை நமது உணவு முறையில் சீரான அளவில் சேர்த்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால், இரத்த சோகை, இதய பாதிப்புகள், எலும்பு பிரச்சனை மற்றும் மார்பக புற்றுநோய் வரை ஏற்படாமல் தடுக்க முடிகிறது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் அளவு

கொலஸ்ட்ரால் அளவு

காளானில் புரதச்சத்து இருக்கிறது, மேலும் இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு இல்லை. நார்ச்சத்து மற்றும் இதிலிருக்கும் சில என்ஸைம்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் இருக்கும் எல்.டி.எல் (தீய) மற்றும் எச்.டி. எல் (நல்ல) எனும் இருவகையான கொழுப்புகளை கட்டுக்குள் வைக்கவும் காளான் பயனளிக்கிறது. இதனால் இதயக் கோளாறுகள் ஏற்படுவதை குறைக்க முடியும்.

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை உள்ள நபர்களிடம் இரும்புச்சத்து அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும். இதனால் மயக்கம், தலைவலி, நரம்பியல் செயல்திறன் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படலாம். காளானில் அதிக இரும்புச்சத்து இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து 90% முழுமையாக உடலுக்குள் உள்வாங்கப்படுகிறது. இதனால் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் தூண்டிவிடப்படுகின்றன.

மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்

மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்

மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு காளான் மிகவும் உதவுகிறது.

எலும்பு வலிமை

எலும்பு வலிமை

காளானில் உயர்ரக கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது. உங்கள் டயட்டில் கால்சியம் சத்தை அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் எலும்பு சம்மந்தப்பட்ட நோய் அல்லது கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

"Ergothioneine" எனும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் காளானில் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனளிக்கிறது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

பல வகை காளான்களை ஆய்வு செய்ததில், இதில் பொட்டாசியம் அளவு நல்ல வகையில் இருப்பதை கண்டறிய முடிந்தது. இவை, இரத்த நாளங்களை இலகுவாக உணர செய்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் கூட குறைக்கப்படுகிறது.

தாமிரம் (Copper)

தாமிரம் (Copper)

தாமிரம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தரவல்லது, இது காளானிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

அதிகளவில் கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவும் உணவான காளானில் கார்பஸ் அளவும் குறைவாக தான் இருக்கிறது. மேலும், இயற்கையாக விளைவிக்கப்படும் காளானால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இதனால், இது உடல் எடையை குறைக்க ஓர் சிறந்த உணவாக திகழ்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Adding Mushrooms In Your Diet

There are so many health benefits in adding Mushrooms in your diet plan, take a look.
Desktop Bottom Promotion