For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் கதிர்வீச்சுக்களால் அழுக்கான உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள்!

இங்கு மொபைல் கதிர்வீச்சுக்களால் அழுக்கான உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

தற்போது நம்மைச் சுற்றி எங்கும் கதிர்வீச்சுக்கள் உள்ளது. நாம் பயன்படுத்தும் மொபைலில் இருந்து, அந்த மொபைலை வைத்திருக்கும் இடம், அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ள வை-பை இணைப்புக்கள், எக்ஸ்-ரே மற்றும் எம்ஆர்ஐ முதல் அனைத்தும், நமக்கு தெரியாமலேயே நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.

Foods To Help You Detox Radiation Naturally

இங்கு இவைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களில் இருந்து உடலை சுத்தமாகவும், பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளோரெல்லா

குளோரெல்லா

இந்த பாசியில் குளோரோஃபில் ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இது நச்சுக்களை நீக்கும் மிகவும் சக்தி வாய்ந்த பொருளும் கூட. இது மெர்குரி பாய்சன் ஏற்படுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். இந்த குளோரெல்லா மாத்திரை வடிவில் விற்கப்படுகிறது. இதை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் 2 உட்கொண்டால், கதிர்வீச்சுக்களால் அழுக்கான உடல் சுத்தமாகும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், கேல் கீரை போன்றவை கதிர்வீச்சுக்களால் அழுக்கான உடலை சுத்தம் செய்யும். அதுவும் இது கதிர்வீச்சுக்களின் அனைத்து கூறுகளையும் நீக்கும்.

ரெய்ஷி காளான் (Reishi Mushrooms)

ரெய்ஷி காளான் (Reishi Mushrooms)

இந்த வகை காளான்களை பிட்சாவில் காணலாம். மேலும் சீன மருத்துவத்தில் இந்த வகை காளான்கள் பயன்படுத்தப்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இதனை உட்கொண்டால், தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் உடலில் சேர்ந்த நச்சுக்கள் வெளியேறும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி என்னும் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கதிர்வீச்சுக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் வைட்டமின் சி செல்லுலர் அளவுகளை வலிமையாக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு சக்தியை வழங்கும். மேலும் இதில் ஆன்டி-வைரல் பொருள் உள்ளது. புற்றுநோயாளிகளுள் ஹீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெயை உணவில் சேர்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

பல ஆய்வுகளில் ஆப்பிள் சாப்பிட்டால், கதிர்வீச்சுக்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும். மேலும் பீட்ரூட் உடலில் இரத்தத்தின் அளவை சீரான அளவில் பராமரிக்க உதவும்.

பூண்டு

பூண்டு

பூண்டுகளில் சல்பர் அதிகம் உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களி கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்படுவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். ஆகவே தினமும் ஒரு பூண்டு சாப்பிட்டு, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Help You Detox Radiation Naturally

Here are some foods you can eat to detox your body from radiation. Read on to know more...
Desktop Bottom Promotion