For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் உணவுகள்!

|

பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது முன்கூட்டியே விந்து வெளிப்படுவதால், துணையை திருப்திப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், அது உறவையே பாதித்துவிடும்.

எனவே ஒவ்வொரு ஆணும் முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும் வழிகளை அறிந்து பின்பற்றி, அப்பிரச்சனையில் இருந்து உடனே விடுபட முயல வேண்டும்.

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைத் தடுக்க ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை ஆண்கள் தினமும் உட்கொண்டு வந்தால், பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைத் தடுக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் ஆண்களுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்கும். இதற்கு அஸ்பாரகஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம்.

முட்டை

முட்டை

முட்டையில் உள்ள வைட்டமின் டி பாலுணர்ச்சியை மேம்படுத்தும். எனவே ஆண்கள் தினமும் 2 முட்டையை சாப்பிட்டு வந்தால், அதனால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, முன்கூட்டியே விந்து வெளியேறுவது தடுக்கப்படும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டை தினமும் சிறிது சாப்பிட்டால், அது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சரிசெய்யும்.

கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின்கள் மற்றும் அனைத்து வகையான அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் உள்ளன. கேரட்டில் இருக்கும் வைட்டமின்கள், ஆணுறுப்பில் உள்ள தசைகள் வலிமையடையச் செய்து, அந்தரங்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸை ஆண்கள் தினமும் உட்கொண்டு வந்தால், மன இறுக்கம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்குவதோடு, அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் வைட்டமின்களான சி, பி மற்றும் கே போன்றவை அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் கே உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் அவகேடோவில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தும் உள்ளதால், பாலுணர்ச அதிகரிக்கும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியும் முன்கூலுட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கும். ஆகவே இப்பழம் கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கும். அதோடு விந்தணுக்களின் அளவையும் அதிகரிக்கும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

ஆண்களின் மலட்டுத்தன்மை, விறைப்புத்தன்மை குறைபாடு, முன்கூட்டியே விந்து தள்ளல் பிரச்சனைகளுக்கு வால்நட்ஸ் நல்ல பலனைத் தரும். இதற்கு அதில் புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பது தான்.

பாதாம்

பாதாம்

பாதாமில் ஜிங்க் மற்றும் புரோட்டீன் உள்ளது. இவை ஆண்களுக்கு பாலியல் பிரச்சனைகளைத் தடுப்பதோடு, அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Cure Premature Ejaculation

Let us now look at these 10 natural remedies for premature ejaculation. Here are 10 foods to cure premature ejaculation in men. Read on...
Story first published: Thursday, September 29, 2016, 14:39 [IST]
Desktop Bottom Promotion