For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்த சோகையை குணப்படுத்தி ரத்தம் அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டியவை !!

ரத்த சோகை பெருமளவு குழந்தைகளையும் இளம் வயதினரையும் குறிப்பாக பெண்களையும் தாக்கும் பாதிப்பு. ரத்தம் விருத்தியாக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை உண்டாலே போதும்.

|

ரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச் சத்து சாப்பிடாததும் வளர் சிதை மாற்றக் கோளாறுகளும் காரணமாகும். ரத்தம் சுத்தகரிக்காமல் இருந்தாலும் ரத்த உற்பத்தி குறைந்து போகும்.

Foods that improve blood circulation

இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை எடுத்துவிட்டு இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

முருங்கை கீரை பருப்பு :

முருங்கை கீரை பருப்பு :

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இலந்தை பழம் :

இலந்தை பழம் :

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

 விளாம்பழம் :

விளாம்பழம் :

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். ரத்தம் சுத்தமாகும். ரத்த விருத்தியும் உண்டாகும்.

தேன் மற்றும் இஞ்சி சாறு :

தேன் மற்றும் இஞ்சி சாறு :

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். ரத்த சிவப்பணுக்கள் அதிகமாகும்.

 நாவல் பழங்கள் :

நாவல் பழங்கள் :

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி உண்டாகும். நினைவாற்றல் பெருகும்

தக்காளி :

தக்காளி :

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

பீட்ரூட் ஜூஸ் :

பீட்ரூட் ஜூஸ் :

வாரம் இருமுறை பீட்ரூட் ஜூஸ் மற்றும் பொறியல் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that improve blood circulation

Foods that cure anemia and improve blood circulation
Desktop Bottom Promotion