For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்வை இழக்கச் செய்யும் ,டயாபடிக் ரெட்டினோபதி வராமலிருக்க இதை சாப்பிட்டால் போதும்!!

|

சர்க்கரை வியாதியே மோசமான நோய். இதய நோய், ரத்தக் கொதிப்பு என பல நோய்களுக்கு வழிகாட்டி இந்த நோய்தான். முக்கியமாய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் கண் பாதிப்புதான் டயாபடிக் ரெட்டினோபதி.

 Eating Fish may help you to reduce Risk of Diabetic Retinopathy

ரத்தத்தில் அதிகரிக்கும் குளுகோஸால், கண்களில் இருக்கும் ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன. இதனால் அங்கே ஒரு புரத மூலக்கூறு திசுவை உண்டாக்கி விடுகின்றன. இதன் விளைவாக ரெட்டினாவின் பின் அமைந்திருக்கும் திசுக்களை பாதிப்படைந்து கண் பார்வையை இழக்க நேரிடுகின்றன.

உலகளவில் கண்பாரை இழந்தவர்களில் பாதி சதவீதம் சர்க்கரை நோயால்தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரெட்டினா ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களால் ஆனது. உணவில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இந்த பார்வைத் திறன் குறைப்பாட்டினை தடுக்கின்றன என பல ஆய்வுகள் நிருபிக்கின்றன.

ஜாமா ஆப்தமாலஜி என்ற பல்கலைக் கழகம் இது பற்றிய ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. ஸ்பெயின் நாட்டில் 2003- 2009 வரை நடந்த ஆய்வில் 55- 80 வயது வரை இருக்கும் சுமார் 3614 பேர் ஈடுப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே டைப் -2 சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள் தினமும் 500 கிராம் கொடுக்கப்பட்டது. இதில் 50 % நோயாளிகளுக்கு டயாபடிக் ரெட்டினோபதி நோய் பாதிக்கவில்லை என தெரிய வந்தது. குறைந்த அளவு மீன் சாபிட்டவர்களுக்கு ரெட்டினோபதியின் தாக்கம் தெரிந்தது.

இந்த ஆய்வின் இறுதியில் வாரம் இருமுறை மீன் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை வியாதியால் வரும் டயாபடிக் ரெட்டினோபதி வராமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

English summary

Eating Fish may help you to reduce Risk of Diabetic Retinopathy

Eating Fish may help you to reduce Risk of Diabetic Retinopathy
Story first published: Monday, August 22, 2016, 17:58 [IST]
Desktop Bottom Promotion