சந்தோஷமா வாழனுமா? அப்போ பழம் காய்களை அதிகம் சாப்பிடுங்க - புதிய ஆய்வு

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பழங்கள் காய்கறிகளை சாப்பிடுங்க என்று கூவாத குறையாக எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்களை மகிழ்ச்சியுடன் வாழவக்கிறது. இது புதிய ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் , பழங்கள் மற்றும் காய்களை பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 12, 385 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வு சுமார் இரு வருடங்களில் நடந்தது.

Eat fruits and vegetables to lead a happy life


இவர்களில் பழம் காய்கறிகள் அதிகம் சாப்பிடாதவர்களுக்கு , ஒரு நாளைக்கு உணவில் 8 பங்கு அதிகமாக பழங்களும், காய்கறிகளும் அளிக்கப்பட்டன.

ஆய்வின் இறுதியில் அவர்களுக்கு வாழ்வில் போதுமான பிடிப்பும், மகிழ்ச்சியும் அதிகரித்ததாக கூறினர். இவற்றை சாப்பிடுவதற்கு முன் திருப்தியின்மை இருந்ததாகவும், இப்போது அந்த பிரச்சனை இல்லை எனவும் கூறியிருக்கின்றனர்.

Eat fruits and vegetables to lead a happy life

எல்லாவித நிறங்களைக் கொண்ட பழங்களையும் காய்கறிகளையும் உண்டால், மகிழ்ச்சியை சுரக்கச் செய்யும் ஹார்மோன்கள் நன்றாக தூண்டி, வாழ்வில் நிம்மதியை தருவதாக வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஸ்வால்ட் கூறியுள்ளார்.

இவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, மன நலத்தையும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைக்கிறது என்று மேலும் கூறுகிறார்.

Eat fruits and vegetables to lead a happy life

இந்த அவசர காலத்தில் பழங்களையும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிடாததால்தான் திருப்தியின்மையில் மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான். இதனால் மன அழுத்தம், போராட்டம் , ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது என்று பப்ளிக் ஹெல்த் என்ற அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

Eat fruits and vegetables to lead a happy life

இந்த ஆய்வின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், உங்கள் அன்றாட உணவில் 80 சதவீதம் காய்களும், பழங்களும் இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை கிடைப்பது உறுதி .

English summary

Eat fruits and vegetables to lead a happy life

Eat fruits and vegetables to lead a happy life
Please Wait while comments are loading...
Subscribe Newsletter