தினமும் ஒரு கப் கேரட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் தெரியுமா?

கேரட்டின் கவர்ந்த நிறத்திற்கேற்ப அதன் சத்துக்களும் உடலில் கவரக் கூடியது. மாலைக் கண் நோய் வராமலும், ரத்தம் சுத்தமாகவும் அதோடு கொழுப்பை குரைக்கவுஜ் செய்கிறது. அதன் நன்மைகள் காண்போம்.

Subscribe to Boldsky

கேரட் உணவு சீரணத்திற்கு காரணமாகும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் காரட்டில் உள்ளது. மாலைக் கண் நோயை தடுக்கும் .

இதில் அதிக பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோடின் மட்டுமல்லாது ஆல்பா கரோட்டின், பயோ ஃபிளாவனாய்ட்ஸ் ஆகியசத்துகளும் உள்ளன.

Eat a cup of carrot everyday to reduce high cholesterol

ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் காரட் உதவுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரட்டை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதய நோய்கள் வராது

கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாக சாப்பிடுஅதை விட பச்சையாக சாப்பிட்டால்தான் அதன் முழு சத்துக்களை பெற முடியும். பச்சையாக சாப்பிடும்போது இதய நோய்களை தடுக்க முடியும்

ஆய்வு :

தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் 3வாரங்கள் அளவில் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

வேகவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் :

காரட்டை நறுக்கி, சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கிறது.

அதாவது அதன் கடினமான செல் சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோடின் சமைக்கும்போது வெளிப்படுகிறது.
காரட்டுடன் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து எடுத்துக் கொண்டால் பீட்டா கரோடின் சத்தை உடல் நன்றாக உறிஞ்சி உள்ளே எடுத்துச் செல்லும்.

 

சரும ஆரோக்கியம் :

கேரட்டிலுள்ள பீட்டா கரோடின் நம் உடலை அடைந்தவுடன் வைட்டமின் ஏ-யாக மாற்றமடைகிறது. இது கண்பார்வையை வலுப்படுத்துவதுடன் சரும பளபளப்பும் தருகிறது.

மாலைக் கண் :

வாரம் 3 முறையாவது காரட் எடுத்துக் கொண்டால் மாலைக் கண் நோயை தடுக்கலாம். அதாவது மாலைக் கண் நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் வருகிறது என்ற நிலையிருக்கும்போது மட்டும் காரட் பயனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Eat a cup of carrot everyday to reduce high cholesterol

Eat a cup of carrot everyday to reduce high cholesterol
Please Wait while comments are loading...
Subscribe Newsletter