தினமும் நீங்க விரும்பி குடிக்கிற இந்த பானம் உங்க கல்லீரல எந்தளவு பாதிக்கிதுன்னு தெரியுமா?

Subscribe to Boldsky

தாகம் எடுத்தால், விக்கினால், நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், மாலை வேளை இடைவேளை உணவுகள் உண்ணும் போது, வேலை செய்துக் கொண்டிருக்கையில் இடையிடையே குடிக்க, பார்டி, ஃபங்க்ஷன் என பல நேரங்களில், இடங்களில் நாம் இதை தான் குடித்து வருகிறோம்.

எதை? தண்ணீரையா? இயற்கை பானங்களையா? இல்லையே! இவற்றுக்கு பதிலாக எனர்ஜி டிரிங்ஸ் எனும் நாள்பட நம் உடலில் விஷமாக மாறும் ஒன்றை தான் மிகவும் விரும்பி நாள்தோறும் குடித்து வருகிறோம். இதனால் நமது உடல் உறுப்புகளும் சேதமடைகின்றன.

இதையும் படிங்க: உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

நாள்தோறம் எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்து வந்ததால் கல்லீரல் பாதிப்பு அடைந்த பெண்ணின் நிலை பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேரி ஆல்வூட்!

இங்கிலாந்தை சேர்ந்தவர் மேரி ஆல்வூட். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர் வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக உணவை உட்கொள்வதை காட்டிலும் அதிகமாக ரெட் புல் எனர்ஜி டிரிங் தான் குடித்து வந்துள்ளார்.

Image Source

ஓர் நாளுக்கு இரண்டு!

ஒரு நாளுக்கு இரண்டு கேன் பேக் டிரிங் என ஆரம்பித்து குடித்து வந்துள்ளார் மேரி ஆல்வூட்.

நாளுக்கு, நாள் இவர் இந்த எனர்ஜி ட்ரிங்கை அதிகமாக குடித்து வந்துள்ளார். காலப் போக்கில் இந்த எண்ணிக்கை 20 எட்டியது.

இடை மெலிந்தது!

ஒரு காலத்தில் இவரது இடை அளவு வேகமாக குறைய துவங்கியது. 24 அங்குலத்தில் இருந்த இவரது இடை சுற்றளவு கடந்த 2015 நவம்பர் மாதம் ஒரேடியாக 16 ஆக குறைந்தது.

இதன் காரணத்தால் மிகவும் அதிர்ச்சியுற்றார் மேரி ஆல்வூட்.

கல்லீரல் வலி!

அவ்வப்போது, தோள்பட்டை, வயிறு, கல்லீரல் வலியும் மேரி ஆல்வூட்-க்கு இருந்து வந்துள்ளது. உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்த போது தான் பெரும் அதிர்ச்சி அடைந்தார் மேரி ஆல்வூட்.

அபாயகரமான நிலையில் கல்லீரல்!

தினமும் அளவுக்கு அதிகமாக எனர்ஜி டிரிங் பருகியதால். அதன் தீயத் தாக்கத்தால், மேரி ஆல்வூட்-ன் கல்லீரல், சாதாரண நிலையை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது.

மருத்துவர்கள் இவருக்கு பெரியளவில் மது அருந்தும் பழக்கம் இருக்கும் என எண்ணினர்.

சர்க்கரை அளவு!

மேரி ஆல்வூட்-க்கு அறவே மதுப்பழக்கம் இல்லை. இவரது கல்லீரல் இவ்வளவு பாதிப்பு அடைந்ததற்கு இவர் குடித்து வந்த எனர்ஜி டிரிங் தான் காரணம் என பிறகு தெரிய வந்தது.

மேலும் இதனால், இவரது உடலில் சர்க்கரை அளவும் அதிகளவில் இருந்தது! கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்திருந்தது.

அபாயம்!

ரெட் புல் மட்டுமல்ல, எந்தவொரு எனர்ஜி டிரிங்-ம் நாள்பட உடல் ஆரோக்கியத்தை சீர்கெடுக்க செய்யும் தன்மை உடையது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவை மிகவும் அபாயமானவை மெல்ல, மெல்ல, இவற்றை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டியது அவசியம் என கூறுகின்றனர்.

வேறு சில உணவுகள்...

கல்லீரலை பாதிக்கும் வேறு சில உணவுகள்., தக்காளி சாஸ், கேன் சூப், சோடா பானங்கள், பார் சாக்லேட்டுகள், பதப்படுத்தி விற்கப்படும் உணவுகள் என இவையும் கூட நால்பப்ட கல்லீரலின் நலனை சீர்கெடுக்கும் தன்மை உடையவை தான்.

மேலும், இதனால், உடலில் கட்டிகள் உண்டாகவும் வாய்ப்புகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Did You Know This Popular Energy Drink Destroys Your Liver

Did You Know? This Popular Energy Drink Destroys Your Liver, take a look on here
Story first published: Wednesday, August 3, 2016, 10:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter