பால் அலர்ஜி இருப்பவர்கள் எவ்வாறு கால்சியம் சத்தை பெறலாம் என தெரியுமா?

பாலிலுள்ள லாக்டோஸ் அலர்ஜியை உண்டாக்குகிறதா? அதற்காக அப்படியே இருந்து விட்டால் எலும்பு பற்கள் எப்படி பலமாகும். இதற்கு மாற்று தீர்வு தெரிய வேண்டுமா? இந்த சிறந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Subscribe to Boldsky

பால் கால்சியம் சத்து மிக அதிகம் கொண்டுள்ள அருமையான உணவுப் பொருள். கால்சியம் பல், எலும்பு உறுதிக்கு தேவை என அறிந்திருப்பீர்கள்.

ஆனால் ஒரு சிலருக்கு பால் ஒவ்வாமை(Lactose intolerance) இருக்கும். பாம் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் லாக்டோஸிற்கு நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்ப்பினால் உண்டாகும் அலர்ஜியே அது.

 dairy free sources of calcium that you know

அவர்கள் பால் தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள முடியாது. பின் எப்படி கால்சியம் சத்தை பெறலாம் என்று தெரிய தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சால்மன் மீன் :

சாலமன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மட்டுமில்லை. கால்சியமும் நிறைந்திருக்கிறது. பால் அருந்தாதவர்கள் சாலமன் மீனை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் அதிக கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது. இரண்டுமே பற்கள் மற்றும் எலும்பு பலத்திற்கு தேவை.

 

எள்ளு :

அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் எள்ளு அதிக கால்சியம் நிறைந்ததாகும். இதில் மெக்னீசியமும் அதிகமாக இருக்கிறது. மூளை மற்றும் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். எலும்பு வளர எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கிட்னி பீன்ஸ் :

வெள்ளையாக சிறு நீரக வடிவில் இருக்கும் பீன்ஸ் பருப்பு வகை அதிக கால்சியம் கொண்டது. அதனை க்ழுஹம்பு மற்றும் பொறியலாக செய்து உண்டால் பூரண கால்சியம் கிடைக்கும்.

காலே :

காலே கீரையில் அதிக கால்சியம் இருக்கிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் இதனை பரிந்துரைக்கலாம்.

இதனை வேக வைத்தோ அல்லது ஜூஸ்காவோ எடுத்துக் கொண்டால் அதன் மினரல் மற்றும் விட்டமின்களை பெறலாம்.

 

ஆரஞ்சு :

சிட்ரஸ் பழங்கள் விட்டமின் சி நிறைந்தது மட்டுமில்லை. கால்சியமும். பால் அருந்தாதவர்கள் ஆரஞ்சில் அதிக கால்சியம் உள்ளது என மகிழ்ச்சி கொள்ளலாம். தினமும் ஆரஞ்சை சாப்பிட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

dairy free sources of calcium that you know

People those are suffering from lactose intolerance , can take these 5 Dairy free sources of calcium for their strong bone and teeth
Please Wait while comments are loading...
Subscribe Newsletter