For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்கிறதா சீனா? பகீர் புகைப்படங்கள்!

|

சீனா என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து உணவு உற்பத்தி வரை உலகெங்கிலும் போலிகளின் அரசனாய் திகழ்கிறது சீனா.

சமீப காலமாக உணவுகளில் போலி தயாரிப்பை சீன உணவு மற்றும் சுகாதார அமைச்சகம் மிகக் கறாராக கண்காணித்து வருகிறது.

இதையும் படிங்க: நம்மை உறைய வைக்கும் சில நரமாமிச வழக்குகள்!

ஆனால், சில வாரங்களுக்கு முன்பு, மாட்டிறைச்சி என்ற பெயரில் இறந்த மனித உடல் உறுப்புகளை ஆப்ரிக்காவிற்கு சீனா ஏற்றுமதி செய்தது என தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியா நாட்டு பத்திரிக்கையில் வெளியான புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் எங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறைச்சி தயாரிப்பு!

இறைச்சி தயாரிப்பு!

சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சி உலகெங்கிலும் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில், தென் ஆப்ரிக்கா நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறைச்சியில் மனித உடல் உறுப்புகள் கலப்படம் செய்துள்ளனர் என அந்நாட்டு சாம்பியா போஸ்ட் எனும் பத்திரிகையில் புகைப்படங்கள் வெளியாகின.

மக்கள் தொகை!

மக்கள் தொகை!

உலக மக்கள் தொகையில் பெரும் பங்கு கொண்டுள்ள சீனா, இறந்தவர்களின் சடலங்களை என்ன செய்வதென்று தெரியாமல் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறதா? என அந்நாட்டு பத்திரிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

சீன தூதர்!

சீன தூதர்!

இதற்கு பதிலளித்த சீன தூதர் யாங் யூமிங் கேன்களில் அடைத்து மாட்டிறைச்சியை தான் சீனா சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது. இது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இதுக் குறித்து விசாரணை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சாம்பியா அரசு!

சாம்பியா அரசு!

இதுக்குறித்து உரிய அமைச்சகத்துடன் விசாரணை நடத்த சாம்பியா அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உலக நாடுகள் மத்தியிலும், சமூக ஊடக பயனாளிகள் மத்தியிலும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா மறுப்பு!

சீனா மறுப்பு!

சீனா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது போலியானவை. உண்மையான புகைப்படங்கள் அல்ல. நாங்கள் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்யவில்லை என கூறியுள்ளது.

மேலும், சீனா சாம்பியா மத்தியிலான ஆரோக்கியமான உறவிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் யாரோ செய்த பித்தலாட்டம் இது என சீனா பதிலளித்துள்ளது.

தீமைகள் என்ன?

தீமைகள் என்ன?

இறந்த மனித உடல் உறுப்புகளை தவறுதலாக உண்டாலும் கூட தீய பாக்டீரியா தாக்கங்கள், வைரஸ் தொற்று மற்றும் கொடிய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.

மேலும், இதனால் உண்டாகும் வைரஸ் தொற்றால் மூளையில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

நரமாமிசம்!

நரமாமிசம்!

நரமாமிசம் உண்டு வாழ்ந்து வரும் மனிதர்களும் இருக்கின்றனர். ஆனால், நேரம் கடந்து உண்டால் கோழி, ஆடு இறைச்சி கூட விஷம் ஆகும் தன்மை கொண்டுள்ளது. இது மனித இறைச்சிக்கு விதிவிலக்கு அல்ல.

தொடர்ந்து சீனாவில் தயாரிக்கப்படும் வேறு சில போலி உணவுகள் பற்றி காணலாம்...

பிளாஸ்டிக் அரிசி!

பிளாஸ்டிக் அரிசி!

பிளாஸ்டிக்கை மூலப் பொருளாகக் கொண்டு இந்த பிளாஸ்டிக் அரிசிகள் சந்தையில் விற்கப் படுகின்றன. இவை, இயற்கை அரிசிகளோடு கலப்பு செய்து விற்கப்படுவதால் கண்டறிவது கொஞ்சம் கடினம்.

போலி முட்டை!

போலி முட்டை!

ஸ்டார்ச், கோகுலண்ட்ஸ் (coagulants), ஜிப்சம் பவுடர், கால்சியம் கார்பனேட் மற்றும் மெழுகு போன்றவற்றை கொண்டு இந்த போலி முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

எலி இறைச்சி!

எலி இறைச்சி!

மட்டன் என்ற பெயரில், எலி, நரி போன்ற விலங்குகளின் கறியை சேர்த்து கலப்படம் செய்து சீனாவில் விற்கபடுகிறது.

அரிசி நூடுல்ஸ்!

அரிசி நூடுல்ஸ்!

பூஞ்சணம் (அ) பூசணம் பிடித்த, கெட்டுப் போன தானியங்கள் மற்றும், அரிசியைக் கொண்டு இந்த அரிசி நூடுல்ஸ் தயாரிக்கப் படுகிறது.

கலப்பட தேன்!

கலப்பட தேன்!

சர்க்கரை சிரப், பீட்ரூட் சிரப் போன்றவற்றின் கலப்புடன் போலி தேன் தயாரிக்கப்படுகிறது. இதில் நீர், சர்க்கரை, இரசாயன வண்ணம் மற்றும் படிகாரம் போன்றவை கலப்பு செய்யப் படுகின்றன.

போலி ஒயின்!

போலி ஒயின்!

சீனாவில் விற்கப்படும் ப்ரீமியம் ஒயின்களில் 90% போலியானவை என சீனாவின் தொலைக்காட்சியே (CTV) வெட்டவெளிச்சமாக கூறியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: food உணவுகள்
English summary

China is Exporting Human Meat to African Supermarkets

China is Exporting Human Meat to African Supermarkets, take a look on here.,
Desktop Bottom Promotion